/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஆக 01, 2025 09:29 PM
நாம சங்கீர்த்தன வைபவம் கோவை, ஆஸ்திக சமாஜம் சார்பில், 26வது ஆண்டு நாமசங்கீர்த்தன வைபவம், தடாகம் ரோடு, இடையர்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே, வி.ஆர்.ஜி., மஹாலில் நடக்கிறது.இன்று காலை, 7:00 மணி முதல், ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம், தோடய மங்களம், குரு கீர்த்தனைகள், அஷ்டபதி, தரங்கம், ராமதாஸர் கீர்த்தனைகள், தியானம், பூஜை, திவ்யநாமம், டோலோற்சவம் ஆகியவை நடக்கிறது.
கம்பராமாயண சொற்பொழிவு ராம்நகர், ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் சார்பில், ஆடி உற்சவத்தை முன்னிட்டு கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு நடக்கிறது. மாலை, 6:30 முதல் நடக்கும் நிகழ்வில், திருச்சி கல்யாணராமன் சிறப்பு சொற்பொழிவாற்றுகிறார்.
கோ-கோ டிராபி எம்.டி.என்,, பியூச்சர் சி.பி.எஸ்.இ.பள்ளி, கோவை கோ- கோ அசோசியேசன் சங்கம் சார்பில், இரண்டாவது எம்.டி.என்., டிராபி போட்டி நடக்கிறது. பள்ளி வளாகத்தில் காலை, 8:00 மணிக்கு நடக்கும் போட்டியில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொள்கின்றனர்.
பகவத்கீதை சத்சங்கம் ரேஸ்கோர்ஸ், நாராயண் டவர்சில், பகவத்கீதை சத்சங்கம் மாலை, 5:30 முதல் இரவு, 7:00 மணி வரை நடக்கிறது. சுவாமி ஜகத்மானந்த சரஸ்வதி சத்சங்கத்தை நிகழ்த்துகிறார்.
ஆன்மிக பயணம் ஸ்ருதி கேந்திரா நிறுவனர் பூஜ்யஸ்ரீ சுவாமி மோக் ஷா வித்யானந்தா சரஸ்வதி சுவாமிகளின் ஆன்மிக பயண நிகழ்ச்சி, திருச்சி ரோடு, கோத்தாரி லேஅவுட், சாதனாலயாவில் நடக்கிறது. அம்ருத பிந்து உபனிஷத் சொற்பொழிவு காலை,7:00 மணி முதல் நடக்கிறது. மாலை, 5:30 மணி முதல் இசை நிகழ்ச்சி, கீதை சொற்பொழிவும் நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் தொடர்ச்சியான சிகிச்சை வாயிலாக, குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை, முகாம் நடக்கிறது.