/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஆக 08, 2025 08:45 PM
மாதாந்திர பஜன் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் சார்பில் மாதாந்திர பஜன், ஆர்.எஸ்.புரம், ஐடியல் ஸ்டோர் அருகில், ஸ்ரீ மாருதி கான சபாவில் நடக்கிறது. மாலை, 5:00 முதல் 6:00 மணி வரை நடக்கும் பஜனையை தொடர்ந்து, பிரசாதம் வழங்கப்படும்,
வேதாந்த வகுப்புகள் ஆர்ஷ வித்யா குடீரம் மற்றும் ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை இணைந்து, ஆன்மிக வேதாந்த வகுப்புகளை நடத்துகின்றன. ஸ்ரீ நாகசாயி பள்ளி வளாகத்தில், மாலை, 6:30 முதல் இரவு, 8:00 மணி வரை வகுப்புகள் நடக்கும்.
பக்தி சொற்பொழிவு காரமடை, அரங்கதசுவாமி கோவிலின் வசந்த மண்படத்தில், எஸ்.வி.டி., பசுமை அறக்கட்டளை சார்பில், பக்திச் சொற்பொழிவு நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு நடக்கும் நிகழ்வில், 'ராமானுஜரும் ஆளவந்தாரும்' என்ற தலைப்பில், சொற்பொழிவாளர் உ.வே வேங்கடேஷ் உரையாற்றுகிறார்.
நெசவு கண்காட்சி தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கோவையின் கைத்தறி பாரம்பரியத்தை போற்றும் வகையில் நெசவு எனம் நிகழ்ச்சி சரவணம்பட்டி, குமரகுரு கல்வி நிறுவன வளாகத்தில் நடக்கிறது. அரிய கைத்தறி புடவைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. கைத்தறி ஆடைகள் குறித்த புகைப்படக் கண்காட்சியும் நடக்கிறது.
பட்டமளிப்பு விழா திருமலையம்பாளையம், நேரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், 24வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. காலை, 10:30 மணிக்கு கல்லுாரி நடக்கும் விழாவில், காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி சிறப்புரையாற்றுகிறார்.
கலை இலக்கியப் போட்டிகள் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியின் தமிழ்த்துறை சார்பில், கலை இலக்கியப் போட்டிகள் நடக்கின்றன. கல்லுாரியின் நுாலக அறையில், காலை, 10:00 மணிக்கு போட்டிகள் நடக்கின்றன.
இளையோர் பாசறை துவக்கம் ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லுாரியில், கோவை வசந்தவாசல் கவிமன்றத்தின் இளையோர் பாசறை துவக்க விழா, மதியம், 2:00 மணிக்கு நடக்கிறது.
கைத்தறி ஆடை அணிவகுப்பு அரசூர், கே.பி.ஆர்.,கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரியில் தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாணவர்களின் கைத்தறி ஆடை அணிவகுப்பு விழா காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.
துவக்க விழா பேரூர் செட்டிபாளையம், பச்சாபாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில் தகவல் தொடர்பு துறை கூட்டமைப்பு துவக்க விழா மதியம், 12:30 மணிக்கு நடக்கிறது. ராபர்ட் போஷ் தொழில்நுட்பத் தலைவர் ராகேஷ், சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.