/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஆக 10, 2025 02:26 AM
ஆராதனை விழா கோவைப்புதுார், நஞ்ஜன்கூடு ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி மடத்தில்,' 354வது ஸ்ரீ ராகவேந்திர சுவாமி' ஆராதனை விழா நடக்கிறது. நிர்மால்யம், பஞ்சாம்ருத அபிஷேகம், சொற்பொழிவு, கனகாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை காலை, 6:00 முதல் 11:30 மணி வரை நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு, ரத உற்சவம், மந்திர புஷ்பம் ஆகியவை நடக்கிறது.
சாதுர்மாஸ்ய விரத மகோற்சவம் ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில், வேத வியாச பூஜை மற்றும் சாதுர்மாஸ்ய விரத மகோற்சவம் காலை, 9:30 மணி முதல் நடக்கிறது. வித்வான் ராகுல் வெள்ளல் மற்றும் குழுவினரின் வாய்ப்பாட்டு கச்சேரி நடக்கிறது.
கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன் சார்பில், சுவாமி தயானந்த சரஸ்வதியில் வீடுதோறும் கீதை உபதேசம் நிகழ்ச்சி நடக்கிறது. டாடாபாத், ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசனில், மாலை, 5:00 மணிக்கு கீதை உபதேசம் நடக்கிறது.
அமைதியின் அனுபவம் தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது.
நெசவு கண்காட்சி தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கோவையின் கைத்தறி பாரம்பரியத்தை போற்றும் வகையில் நெசவு எனும் நிகழ்ச்சி சரவணம்பட்டி, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லுாரியில் காலை, 10:00 மணி முதல் நடக்கிறது. கோவையின் அரிய கைத்தறி புடவைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. கைத்தறி ஆடைகள் குறித்த புகைப்படக் கண்காட்சியும் நடக்கிறது.
கல்வி தின விழா அகில இந்திய தேவாங்கர் சமூக நல சங்கம் கோவை சார்பில், சர்.பிட்டி தியாகராயர் 174வது பிறந்த நாள் விழா, கல்வி தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இடையர்பாளையம், வாசுகி திருமண மண்டபத்தில், காலை, 9:30 மணி முதல் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
வெளிநாட்டுக் கல்வி கண்காட்சி கே.சி.ஓவர்சீஸ் எஜூகேஷன் சார்பில், வெளிநாட்டு கல்வி கண்காட்சி, அவிநாசி ரோடு, தி ரெசிடன்சி டவர்சில் நடக்கிறது. காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கும் கண்காட்சியில், 13 நாடுகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட, பல்கலையின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
ரக் ஷா பந்தன் விழா ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் சார்பில், ரக் ஷா பந்தன் விழா கொண்டாடப்படுகிறது. ராதாகிருஷ்ணர் கோவில் திடலில் காலை, 7:00 மணிக்கு விழா நடக்கிறது.
புத்தகத் திருவிழா தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஐந்தாவது மேட்டுப்பாளையம் புத்தகத் திருவிழா, மேட்டுப்பாளையம், இ.எம்.எஸ். திருமண மண்டபத்தில் காலை, 9:00 மணி முதல் நடக்கிறது. இன்று முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மற்றும் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், எழுத்தாளர் பாமரன் கலந்துகொள்கின்றனர்.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஆலாந்துறை உயர்நிலைப்பள்ளியில், 1986ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. 39 ஆண்டுகளுக்குப் பிறகு சாடிவயல், நண்டாங்கரை, கல்கொத்திபதியில் முன்னாள் மாணவர்கள் சந்தித்துக்கொள்கின்றனர்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது.
* குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.