/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஆக 15, 2025 09:11 PM
'தினமலர்' நடத்தும் ஷாப்பிங் திருவிழா
'தினமலர்' நாளிதழ் மற்றும் சத்யா நிறுவனம் இணைந்து நடத்தும், வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, கோவை அவிநாசி ரோட்டில் உள்ள, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடக்கிறது.
இதில், 250க்கும் மேற்பட்ட ஸ்டால்களில், அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், பொருட்கள் குவிந்துள்ளன.
மேலும், பொழுது போக்கு அம்சங்கள், குட்டீஸ்களுக்கான விளையாட்டுகள் உள்ளன. எலக்ட்ரானிக், ஆடை, ஆபரணங்கள் என, அனைத்தும் ஒரே கூரையின் கீழ் பர்ச்சேஸ் செய்யலாம்.
கிருத்திகை வழிபாடு கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், இன்று கிருத்திகை வழிபாடு நடக்கிறது. மருதமலை சுப்ரமணியர் கோவிலில் இன்று காலை, 7:00 மணிக்கு சுப்ரமணியருக்கு சிறப்பு அபிேஷகத்தை தொடர்ந்து அலங்கார பூஜை நடக்கிறது. இதேபோல், முருகன் கோவில்கள் மற்றும் சன்னதிகளிலும், இன்று காலை முதல் முருகனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடக்கிறது.
கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாட்டம் கோவை கொடிசியா அருகில் அமைந்துள்ள, இஸ்கான் கோவிலில், கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
இன்று காலை முதல் இரவு வரை, பக்தி பாடல்கள், குழந்தைகளுக்கான போட்டிகள், கிருஷ்ணரின் வரலாறு குறித்த சிறப்புரை உள்ளிட்டவை நடக்கின்றன.
கும்மியாட்டம் தடாகம் ரோடு, வேலாண்டிபாளையத்தில் உள்ள, கிருஷ்ணசுவாமி கோவிலில், கிருஷ்ணர் ஜெயந்தி முன்னிட்டு, இன்று காலை, 8:00 மணிக்கு, சுதர்சன வேள்வி நடக்கிறது. 10:00 மணிக்கு, திருமெய் அஞ்சன சேவையும் நடக்கிறது.
இரவு, 7:00 மணிக்கு, கொலு பூஜை நடக்கிறது. இத்துடன், நாளை உறியடிக்கும் 3 இளைஞர்களை தேர்ந்தெடுக்க பூ கேட்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பூ கேட்பு முடிந்தது, கிராமிய கும்மியாட்டம் நடக்கிறது. 8:30 மணிக்கு, குழந்தை கிருஷ்ணரை தொட்டிலில் இட்டு தாலாட்டு பாடப்படுகிறது.
திருக்குறள் உரை மலுமிச்சம்பட்டியில் உள்ள, ஆத்ம வித்யாலயம் அத்வைத வேதாந்த குருகுலம் சார்பில், சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது. திருக்குறள் உரை என்ற தலைப்பில், இன்று மாலை, 5:30 முதல் இரவு, 7:00 மணி வரை நடக்கிறது. சுவாமி சங்கரானந்தா சொற்பொழிவாற்றுகிறார். ஆர்வம் உள்ளோர் இதில் பங்கேற்று திருக்குறளின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.
நாட்டிய போட்டி கோவையில் செயல்படும் குளோபல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில், குளோபல் நாட்டியம் மற்றும் இசை போட்டி இன்று நடக்கிறது.
அவிநாசி ரோடு, நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் நடக்கும் இந்த போட்டியில், பல்வேறு நாட்டிய பள்ளிகளை சேர்ந்தவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்துகின்றனர். காலை, 9:00 மணி முதல் போட்டி துவங்குகிறது.