/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஆக 16, 2025 09:03 PM
'தினமலர்' நடத்தும் ஷாப்பிங் திருவிழா
'தினமலர்' சார்பில் ஆண்டுதோறும் நடத்தப் படும், ஷாப்பிங் திருவிழா, கோவையில் கோலாகலமாக துவங்கி நடந்து வருகிறது. கோவை அவிநாசி ரோட்டில் உள்ள, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கும் இத்திருவிழாவில், வீட்டு உபயோகப்பொருட்கள், துணி ரகங்க ள், பேன்ஸி பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள், உணவு வகைகள் என, அனைத்தும் உள்ளன. இந்த ஞாயிற்றுக்கிழமையை, நீங்கள் உற்சாகமாக கொண்டாட இந்த அரங்குக்கு 'விசிட்' செய்யலாம்.
உறியடி உற்சவம் தடாகம் ரோடு, வேலாண்டிபாளையம், கிருஷ்ணசுவாமி கோவிலில், கிருஷ்ணர் ஜெயந்தி விழா இரு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இன்று பிற்பகல், 3:00 மணிக்கு, தடாகம் ரோட்டில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் இருந்து உறி, பூஜை பொருட்கள் எடுத்து வரப்படுகின்றன. கிருஷ்ணர் வேடமணிந்த குழந்தைகளுடன் தாசர்கள் சங்கு நாதம் முழுங்க ஊர்வலம் நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு, உறியடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, அன்னதானமும், இரவு, 7:00 மணிக்கு, சுவாமி வீதியுலாவும் நடக்கின்றன.
அறிவியல் ஆன்மிக ஐயம் தெளிதல் கோவை, மலுமிச்சம்பட்டியில் செயல்படும், ஆத்ம வித்யாலயம் அத்வைத வேதாந்த குருகுலத்தில், அறிவியல் ஆன்மிக ஐயம் தெளிதல் என்ற தலைப்பில், இன்று சொற்பொழிவு நடக்கிறது. மாலை, 5:30 முதல் இரவு, 7:00 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில், சுவாமி சங்கரானந்தா சொற்பொழிவாற்றுகிறார்.
கருத்தரங்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில், விவசாயிகள் தின கருத்தரங்கம் இன்று கோவையில் நடக்கிறது. அவிநாசி ரோட்டில் உள்ள, ஸ்ரீதேவி மகாலில் இன்று பிற்பகல், 3:00க்கு நடக்கும் இக்கருத்தரங்கில், எம்.பி., ஜி.கே.வாசன் சிறப்புரையாற்றுகிறார். த.மா.கா. மாநில மற்றும் மாவட்ட தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
ஆலோசனை கூட்டம் கோவை மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், சின்னவேடம்பட்டி ஏரிக்கரையில், பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பான செயல்முறை விளக்க கூட்டம் நாளை ஆர்.எஸ்.புரத்தில் நடக்கிறது. இது தொடர்பாக விவாதிக்கவும், ஆலோசனை வழங்கவும், சின்னவேடம்பட்டி ஏரிக்கரை பகுதி குடியிருப்போர் மற்றும் விவசாயிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம், சின்னவேடம்பட்டி கவுமார மடாலய திருமண மண்டபத்தில், இன்று பிற்பகல், 3:00 மணிக்கு நடக்கிறது.
'குடி'யில் இருந்து மீள ஆலோசனை ஆல்கஹாலிக் அனானிமஸ் அமைப்பு சார்பில், மதுவுக்கு அடிமையானவர்களை மீட்க ஆலோசனை வழங்கும் கூட்டம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.நர்சரி பள்ளி வளாகத்தில், இன்று காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது.
இதேபோல், பாலக்காடு ரோடு, குனியமுத்துாரில் உள்ள, டிவைன் மேரி சர்ச்சிலும் இன்று மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை இக்கூட்டம் நடக்கிறது. குடி நோயில் இருந்து மீள முயற்சிப்போர், இக்கூட்டத்தில் பங்கேற்று பயனடையலாம்.