/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஆக 29, 2025 10:13 PM
மகாபாரதத் தத்துவம் பாரதிய வித்யா பவன் சார்பில், உபன்யாசத் தொடர் சொற்பொழிவு, ஆர்.எஸ்.புரம், பவன் வளாகத்தில், மாலை5.30 மணி முதல் நடக்கிறது. ஆன்மிக சொற்பொழிவாளர் உ.வே.வெங்கடேஷ், 'மகாபாராதத் தத்துவம்' என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
மனைவி நல வேட்பு விழா கோவை மனவளக்கலைமன்ற அறக்கட்டளை சார்பில், மனைவி நல வேட்பு விழா நடக்கிறது. காந்திபுரம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், மாலை4.30 முதல் இரவு8மணி வரை நடக்கிறது. மலர் கனி பரிமாற்றம், உயிர்காப்பு தவம் பெற்று, தம்பதிகள் ஆசி பெற்றுக்கொள்ளலாம்.
கொங்கை தீ தியேட்டர் ஷ்ரத்தா சார்பில், சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு, 'கொங்கை தீ' என்ற நாடகம் அரங்கேற்றப்படுகிறது. ஹோப் காலேஜ், சித்ரா நகர், கிளஸ்டர் மீடியா இன்ஸ்டிடியூட், தி மேடை அரங்கில் மாலை6.30 மணிக்கு நடக்கிறது.
வெறிநாய் தடுப்பூசி முகாம் கோவை கால்நடை பன்முக மருத்துவமனை, பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் கோவை மிட்டவுன் சங்கம் இணைந்து, இலவச வெறிநாய் தடுப்பூசி முகாமை நடத்துகின்றன. டவுன்ஹால், இஸ்மாயில் வீதி, அரசு கால்நடை பன்முக மருத்துவமனையில், காலை 9முதல் மதியம்1மணி வரை முகாம் நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார் புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார் ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இரவு 7 முதல் 8.30 மணி வரை முகாம் நடக்கிறது.
திருக்குறள் உரை மலுமிச்சம்பட்டி, ஆத்ம வித்யாலயம், அத்வைத வேதாந்த குருகுலம் சார்பில், திருக்குறள் உரை நிகழ்ச்சி நடக்கிறது. மாலை5.30 முதல் இரவு7மணிவரை நடக்கும் நிகழ்வில், சுவாமி சங்கரானந்தா உரையாற்றுகிறார்.