/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஆக 31, 2025 05:55 AM
பஞ்சரி மேளம் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் பஞ்சரி மேளம் நிகழ்ச்சி, ஆர்.எஸ்.புரம், கிக்கானி மேல்நிலைப்பள்ளியில், மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. 65க்கும் மேற்பட்ட கலைஞர்கள், 4 இசைக் கருவிகளின் இசைக்கொண்டாட்டத்தை அரங்கேற்றுகின்றனர்.
லலிதா சஹஸ்ரநாம பாராயணம் ஈச்சனாரி, ஸ்ரீ மகாலட்சுமி கோயிலில், அகண்ட லலிதா சஹஸ்ரநாம பாராயணம் காலை 9 முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. பாராயணத்தில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும், ஸ்ரீ க்ஷேத்ர சகடபுரம் ஸ்ரீமடம் வழங்கப்படும்.
'கொங்கை தீ' நாடகம் சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு, 'கொங்கை தீ' என்ற நாடகம் அரங்கேற்றப்படுகிறது. ஹோப் காலேஜ், சித்ரா நகர், கிளஸ்டர் மீடியா இன்ஸ்டியூட், தி மேடை அரங்கில் மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.
ஆண்டாள் திருக்கல்யாணம் பாரதிய வித்யா பவன் சார்பில், உபன்யாசத் தொடர் சொற்பொழிவு, ஆர்.எஸ்.புரம், பவன் வளாகத்தில், மாலை 5.30 முதல் நடக்கிறது. ஆன்மிக சொற்பொழிவாளர் உ.வே.வெங்கடேஷ், ஆண்டாள் திருக்கல்யாணம் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
சச்சிதானந்த யோகம் போத்தனுார் ரோடு, செட்டிபாளையம், தாமரைக் கோயிலில், 87வது மாதாந்திரக் கூட்டம் மாலை 6 மணிக்கு நடக்கிறது. யோகா பயிற்றுனர் லோகநாதன் 'சச்சிதானந்த யோகம்' என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் சார்பில், சுவாமி தயானந்த சரஸ்வதியின் வீடுதோறும் கீதா உபதேசம் நிகழ்ச்சி நடக்கிறது. டாடாபாத், 104, மூன்றாவது வீதி, ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷனில் மாலை 5 மணிக்கு நடக்கிறது.
பரிசளிப்பு விழா ஞானம் பவுண்டேஷன், வடவள்ளி 'தாம்ப்ராஸ் வெல்பேர் டிரஸ்ட்' சார்பில் பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. வடவள்ளி, தாம்ப்ராஸ் கட்டடத்தில், மாலை 4.15 மணியளவில் நடக்கிறது.
நுாலக ஆண்டு விழா மாச்சம்பாளையம், சுந்தராபுரம், நண்பர்கள் அன்பு நுாலகத்தின் 49ம் ஆண்டு விழா காலை 10 மணி முதல் நடக்கிறது. மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது.
கண் பரிசோதனை முகாம் கோவை மாவட்ட பார்வை இழப்புத் தடுப்புச் சங்கம் மற்றும் அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை, அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து, இலவச கண் பரிசோதனை முகாம் நடத்துகின்றன. கோவில்மேடு, பிரிஸ்க் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியில், காலை 8.30 முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் தொடர்ச்சியான சிகிச்சை வாயிலாக குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இரவு 7 முதல் 8.30 மணி வரை முகாம் நடக்கிறது.

