/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : செப் 05, 2025 10:03 PM
சத்ய சாயி கோடி அர்ச்சனை சத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், சத்ய சாயி கோடி நாம அர்ச்சனை நடக்கிறது. ரேஸ்கோர்ஸ், வெஸ்ட் கிளப் ரோட்டில் நடக்கிறது. காலை 7, 9.30 மற்றும் மாலை 4.30 மணிக்கு பாராயணம், மாலை 5.30க்கு சாய்பஜன் சத்சங்கம் நடக்கிறது.
நாட்டியாஞ்சலி கோவை ரோட்டரி கிளப் மெட்ரோபாலிஸ் சார்பில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மாலை 6.15 முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர்கள், பரதநாட்டியம், மோகினியாட்டம் மற்றும் ஒடிசி போன்ற கலைநிகழ்வுகளை அரங்கேற்றினர்.
பகவத்கீதை சத்சங்கம் ரேஸ்கோர்ஸ், நாராயண் டவர்சில், பகவத்கீதை சத்சங்கம் மாலை 5.30 முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது. சுவாமி ஜகத்மானந்த சரஸ்வதி சத்சங்கத்தை நிகழ்த்துகிறார்.
கந்தர் அனுபூதி மலுமிச்சம்பட்டி, ஆத்ம வித்யாலயம் அத்வைத வேதாந்த குருகுலம் சார்பில் வாராந்திரசத்சங்கம் நடக்கிறது. மாலை 5.30 முதல் இரவு 7 மணி வரை, 'கந்தர் அனுபூதி' என்ற தலைப்பில் சுவாமி சங்கரானந்தா உரையாற்றுகிறார்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் தொடர்ச்சியான சிகிச்சையால் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரமம் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இரவு 7 முதல் 8.30 மணி வரை முகாம் நடக்கிறது.