/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : செப் 27, 2025 11:32 PM
அகண்ட நாமம் மஹாரண்யம் ஸ்ரீ முரளீதர சுவாமிஜியின் ஐப்பசி சுவாதி, திருநட்சத்திரத்தையொட்டி, மகாமந்திர அகண்ட நாமம், ராம்நகர், கோதண்டராம சுவாமி கோயிலில் நடக்கிறது. காலை 11.30 மணி முதல் மஹாமந்திர கீர்த்தனம், பக்தர்களின் சத்சங்க அனுபவங்கள், குரு மஹிமை பிரவசனம் நடக்கிறது.
கி.ரா. விருது விழா சக்தி மசாலா நிறுவனம் சார்பில், விஜயா வாசகர் வட்டத்தின் 2025 கி.ரா., விருது வழங்கும் விழா, பீளமேடு பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லுாரியில் காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில், உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் , விருது வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
சிறப்பு பட்டிமன்றம் ராயல்கேர் மருத்துவமனை மற்றும் 'உயிரின் சுவாசம்' அறக்கட்டளை சார்பில், 'செயற்கரிய செயல் தவமா? தானமா? என்ற தலைப்பில், சிறப்பு பட்டிமன்றம் நடக்கிறது. நவஇந்தியா, இந்துஸ்தான் கலை கல்லுாரியில் காலை 10 மணிக்கு நடக்கிறது. பட்டிமன்ற பேச்சாளர் சுகி.சிவம் நடுவராக கலந்துகொள்கிறார்.
வெள்ளி விழா இந்து ஆலயப்பாதுகாப்பு இயக்கம் சார்பில், 25ம் ஆண்டு வெள்ளி விழா உழவாரப்பணி, டவுன்ஹால் கோனியம்மன் கோவில் வளாகத்தில் நடக்கிறது. காலை 6 மணிக்கு சங்கமேஸ்வரர் கோயிலில் இருந்து 108 பால்குடம், தீர்த்தக்குடம் வருதலும், காலை 10 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது.
கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன் சார்பில், சுவாமி தயானந்த சரஸ்வதியின் வீடுதோறும் கீதை உபதேசம் நிகழ்ச்சி நடக்கிறது. டாடாபாத், 104, மூன்றாவது வீதி, ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷனில் மாலை 5 மணிக்கு நடக்கிறது.
உயர்ந்த பக்தி எது டெப்ரி இன்ஜினியரிங் நிறுவனம் சார்பில், 'உயர்ந்த பக்தி எது?' என்ற தலைப்பில் அபங்க சங்கீர்த்தனம் ஹரிகதை நடக்கிறது. ராம்நகர், ஸ்ரீ ராம்லட்சுமி ஹாலில் நடக்கும் நிகழ்வில் மாலை 6.30 மணிக்கு ரகுநாத்தாஸ் மஹராஜ் சிறப்பு சொற்பொழிவாற்றுகிறார்.
இலக்கியச் சந்திப்பு கோவை மாவட்ட மைய நுாலகம் மற்றும் வாசக சாலை சார்பில் இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி, ஆர்.எஸ்.புரம் கோவை மாவட்ட மைய நுாலகத்தில் மாலை 4 மணி முதல் நடக்கிறது. கவிஞர் இசையின் 'கரகரப்பின் மதுரம்' கட்டுரைத் தொகுப்பு குறித்து எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் கலந்துரையாடுகின்றனர்.
ஆயுர்வேத முகாம் கோவை வைத்தியரத்தினம் அவுஷதசாலா மற்றும் காஞ்சி காமகோடி மந்திர் டிரஸ்ட் சார்பில், ஆயுர்வே சுகாதார முகாம், ஆர்.எஸ்.புரம் காமாட்சி அம்மன் கோயிலில் நடக்கிறது. காலை 10 முதல் மதியம் 2 மணி வரை நடக்கும் முகாமில், மூத்த ஆயுர்வேத மருத்துவர்கள் இலவச ஆலோசனை வழங்குகின்றனர்.
சிரி க்கலாம் வாங்க கோவை நகைச்சுவை சங்கம் மற்றும் பரிபூரணம் ஐஸ்வர்யா சீனியர் லிவிங் பாரடைஸ் சார்பில் சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சி, நவஇந்தியா இந்துஸ்தான் கலை கல்லுாரியில் மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. அனுமதி இலவசம்.
தடுப்பூசி முகாம் சர்வதேச ரேபிஸ் தினத்தையொட்டி, இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம், சூலுார் ஆர்.என்.கே., கால்நடை மருத்துவமனையில் நடக்கிறது. காலை 9.30 முதல் மதியம் 1.30 மணி வரை, மாலை 5.00 முதல் மாலை 6.30 மணி வரை நடக்கிறது.
500வது கூட்டம் கோவை இயற்கை நலச் சங்கம் சார்பில், 500வது மாத சிறப்பு கூட்டம், மருதமலை ரோடு, வேளாண் பல்கலையின் கோல்டன் ஜூபிளி ஹாலில் காலை 10 முதல் நடக்கிறது. சங்க தலைவர் பன்னீர்செல்வம், வேளாண் பல்கலை துணைவேந்தர் தமிழ்வேந்தன் பங்கேற்கின்றனர்.
நுால் வெளியீட்டு விழா கோவைப்புதுார், நேதாஜி நகர், ஸ்ரீ சித்தர் ஞான பீடம் நுால் வெளியீட்டு விழா, சிவக்குடில் வளாகத்தில், காலை 10 மணிக்கு நடக்கிறது. பாரதியார் பல்கலை மொழியியல் துறை தலைவர் கருணாகரன் தலைமை வகிக்கிறார்.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு உப்பிலிபாளையம், ஆர்.கே. ரங்கம்மாள் கல்வி நிலையத்தில் 1975ம் ஆண்டு படித்த மாணவர்கள் மீண்டும் சந்தித்துக் கொள்கின்றனர். தொண்டாமுத்துார், வெஸ்டர்ன் வேலி ரிசார்டில் காலை 9.30 மணி முதல் நடக்கிறது.
கண் பரிசோதனை முகாம் அன்னுார் டவுன் ரேட்டரி சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது. மேட்டுப்பாளையம் ரோடு, சரவணா ஹாலில் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை முகாம் நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப் பழக்கத்தில் இருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார் புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப் புதுார் ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இரவு 7 முதல் 8.30 மணி வரை முகாம் நடக்கிறது.
அமைதியின் அனுபவம் தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாதுரை சாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை 11 மணிக்கு சத்சங் நடக்கிறது.
இருதய ஆலோசனை முகாம் சித்தாபுதுார், சரோஜினி நாடு ரோடு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மாபெரும் இலவச இருதய ஆலோசனை மருத்துவ முகாம் நடக்கிறது. பச்சாபாளையம் - பேரூர், ராமகிருஷ்ணா ஊரக மருத்துவ முகாமில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.
----- நவராத்திரி பெருந்திருவிழா
l ஒம்சக்தி ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில், குறிச்சி வீட்டு வசதி வாரிய திட்டம் - 2, சிட்கோ. மகா பேரொளி வழிபாடு - மாலை 6.30 மணி. பிரசாதம் வழங்குதல், குழந்தைகள் மாறுவேடப்போட்டி, நடன நிகழ்ச்சி - இரவு 7 மணி.
l திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி., புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு. காலை 6 மணி முதல்.
l விசாலாட்சி விஸ்வநாதர் கோவில், காமாட்சி நகர், கோவைப்புதுார். கர்நாடக இசை - மாலை 6.30 முதல் 8.30 மணி வரை.
l ராஜ கணபதி விநாயகர் கோவில், ராஜீவ்காந்தி நகர், சவுரிபாளையம். நவராத்திரி பூஜை - தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - மாலை 5 மணி.
l அய்யப்ப சுவாமி கோவில், நியு சித்தாபுதுார். நாட்டிய நிகழ்ச்சி - காலை 7.30 முதல். நடன நிகழ்ச்சி - மாலை 6.30 முதல்.
l காமாட்சி அம்பாள் ஆலயம், ஆர்.எஸ்.புரம். பஜனை - மாலை 5 மணி, இசை நிகழ்ச்சி - மாலை 6 மணி.
l சாரதாலயம், ரேஸ்கோர்ஸ். யாகசாலை சண்டி பாராயணம், அஷ்டாவதன சேவை, மகா தீபாராதனை - காலை 7 முதல் மற்றும் இரவு 8 மணி முதல்.
l வேதபாடசாலை, ஸ்ரீ அன்னபூரணி சன்னதி, ஆ.எஸ்.புரம். சுயம்வர பார்வதி ஹோம் - காலை 8.30 மணி.
சுகாசினி பூஜை சண்டி ஹோமம் காமாட்சி அம்மன் கோவில், ஆர்.எஸ்.புரம். காலை 10 மணி.