/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : அக் 25, 2025 12:26 AM
கந்தசஷ்டி விழா சுக்கிரவார்பேட்டை, பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில், 63வது கந்த சஷ்டிப் பெருவிழா நடக்கிறது. 108 அபிஷேகம், வேள்வி பூஜை, மகா தீபாராதனை காலை 10 மணி முதல் நடக்கிறது. மாலை 5.30 மணி முதல், குருவாயூரப்பன் சிறப்பு அலங்காரமும், தீபராதனையும் நடைபெறும். இரவு 7 மணிக்கு, 'கருணைமிகு கந்தசஷ்டி' என்ற தலைப்பில், சொற்பொழிவு நடக்கிறது.
சண்டி ஹோமம் தடாகம்ரோடு, கே.என்.ஜி. புதுார், சிருங்கேரி சிவகுரு மகாவிஷ்ணு சேத்ரத்தில், சண்டி மஹா ஹோமம் நடக்கிறது. காலை 9 முதல் 11 மணி வரை, சக்கர நவாவரண பூஜையும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரை சண்டி ஹோமமும் நடக்கிறது.
பதஞ்சலி யோக சூத்திரம் மலுமிச்சம்பட்டி, ஆத்ம வித்யாலயம் அத்வைத வேதாந்த குருகுலத்தில் வாராந்திரசத்சங்கம் நடக்கிறது. மாலை, 5.30 முதல் இரவு 7 மணி வரை, 'பதஞ்சலியோக சூத்திரம்' என்ற தலைப்பில் ஆச்சார்யா சுரேஷ் உரையாற்றுகிறார்.
முன்னாள் மாணவர் சங்க கூட்டம் பெரியநாயக்கன்பாளையம், யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா காலை, 10.30 மணிக்கு கல்லுாரி கலையரங்கில் நடக்கிறது. தொடர்ந்து, மதியம் 2 மணிக்கு, முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் நடக்கிறது.
படைப்பாளருக்கு பாராட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கம் கோவை மாவட்ட 16வது மாநாடு கலைவிழா நடக்கிறது.
இன்று சிங்காநல்லுார், வரதராஜபுரம், சக்கரையார் திருமண மண்டபத்தில் மாலை 4 மணிக்கு கருத்தரங்கம் மற்றும் படைப்பாளர்களுக்கு பாராட்டு விழா நடக்கிறது.
என்.ஜி.ஐ.,ஒலிம்பியாட் திருமலையம்பாளையம், நேரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், என்.ஜி.ஐ., ஒலிம்பியாட் போட்டி காலை 10 மணிக்கு நடக்கிறது. நேரு கல்வி குழும தலைவர் கிருஷ்ணதாஸ், செயலாளர் கிருஷ்ணகுமார்,நேரு சர்வதேச பள்ளி தாளாளர் சைதன்யா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
சொற்பொழிவு பீ ளமேடு, பி.எஸ்.ஜி., அறநிலையம் சார்பில், ஆன்மிக இலக்கியத் தொடர்சொற்பொழிவு, பீளமேடு, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி வளாகத்தில் மாலை 5.15 மணிக்கு நடக்கிறது. 'பண்பெனப்படுவது' என்ற தலைப்பில், சொற்பொழிவாளர் திருமாறன் உரையாற்றுகிறார்.
புனரமைப்பு பணி துவக்கம் ரோட்டரி கோயம்புத்துார் மான்செஸ்டர் மற்றும் மார்ட்டின் குழுமம் சார்பில், கோவையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கவுசிகா நதி புனரமைப்புப் பணி நடக்கிறது. இதன் துவக்க நிகழ்வு, கோவில்பாளையம் கவுசிகா நதி பாலம் அருகே, காலை 10 மணிக்கு நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இரவு 7 முதல் 8:30 மணி வரை முகாம் நடக்கிறது.

