/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : நவ 01, 2025 11:37 PM
வள்ளி திருக்கல்யாணம் ஆர்.எஸ்.புரம், காமாட்சி அம்மன் கோவிலில், வள்ளி தேவசேனா, சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. காலை 9 மணி முதல் நடக்கும் திருக்கல்யாண நிகழ்வில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம்.
கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் சார்பில் சுவாமி தயானந்த சரஸ்வதியின் வீடுதோறும் கீதை உபதேசம் நிகழ்ச்சி நடக்கிறது. டாடாபாத், 104, மூன்றாவது வீதி, ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசனில் மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது.
நாட்டிய விழா பாரதீய வித்யா பவன் சார்பில், 24வது நாட்டிய விழா, ஆர்.எஸ்.புரம் பவன் வளாகத்தில் மாலை 6 மணிக்கு நடக்கிறது. 'தஞ்சை நால்வர்' என்ற தலைப்பில், ஸ்ரீ சாய் நிருதா பள்ளி மற்றும் தஞ்சாவூர் கலா வித்யாலயா பள்ளி மாணவர்கள் நடனங்களை அரங்கேற்றுகின்றனர்.
மணப்பெண் நகை கண்காட்சி வேகா ஜூவல்லரி சார்பில் மணப்பெண்களுக்கான தங்க நகைக்காட்சி, அவிநாசி ரோடு, தி ரெசிடன்சி டவர் ஹோட்டலில் நடக்கிறது. கலைநயமிக்க, நேர்த்தியான நகை தொகுப்புகளை காட்சிப்படுத்தியுள்ளது. தங்கம், வைரம், போல்கி நகை கலெக்சன் உள்ளது. காலை 10 மணி முதல் கண்காட்சியை பார்வையிடலாம் .
சட்ட விழிப்புணர்வு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் சார்பில் சட்ட விழிப் புணர்வு கருத்தரங்கம் ஏ.டி.டி., காலனி, கேரளா கிளப்பில், மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. இந்திய சட்டம், நுகர்வோர், பெண்கள் மற்றும் குழந்தை களுக்கான சட்டம், சட்டமே பாதுகாப்பு ஆகிய தலைப்புகளில் சிறப்புரை வழங்கப்படுகிறது.
யோகா போட்டிகள் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் மிட்டவுன் சார்பில், பள்ளிகளுக்கு இடையேயான யோகா போட்டி இன்று நடக்கிறது. பூ மார்க்கெட், தேவாங்க பள்ளியில் காலை 8 மணி முதல் போட்டிகள் நடக்கிறது.
ஆண்டு விழா ஸ்ரீ அபிநய நாட்டியாலயம் மற்றும் ஸ்ரீ ஆத்ம வித்யாலயத்தில், 13வது ஆண்டு விழா நடக்கிறது. ஆர்.எஸ்.புரம், ஐ.எம்.ஏ., ஹாலி ல் மாலை 3 மணிக்கு நடக்கிறது.
களப்பணி கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை பராமரிக்கும் களப்பணி நடக்கிறது. கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் காலை 7 முதல் 9.30 மணி வரை, களப்பணி நடக்கிறது.
அமைதியின் அனுபவம் தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றினால் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11.00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் தொடர்ச்சியான சிகிச்சையினால் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இரவு, 7 முதல் 8.30 மணி வரை, முகாம் நடக்கிறது.

