தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்... (04.01.2026) கோவை

இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்... (04.01.2026) கோவை

இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்... (04.01.2026) கோவை


ADDED : ஜன 04, 2026 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 04, 2026 05:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளி வழிகாட்டி தினமலர் நாளிதழின், 'பள்ளி வழிகாட்டி 2026' நிகழ்ச்சி நடக்கிறது. எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சி, அவிநாசி ரோடு சுகுணா திருமண மண்டபத்தில், காலை 10 முதல் மாலை 6.30 மணி வரை நடக்கிறது. கொங்கு மண்டலத்தின் மிகச்சிறந்த 25க்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒரே கூரையின் கீழ் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றன.

தர்மசாஸ்தா மஹோத்சவம் ஸ்ரீ சபரீச சேவா சங்கம் சார்பில் 13ம் ஆண்டு தர்மசாஸ்தா மஹோத்சவம் காலை 6 முதல் மதியம் 1 மணி வரை, நடக்கிறது.

எப்போ வருவாரோ! ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், 'எப்போவருவாரோ 2026' ஆன்மிக தொடர் சொற்பொழிவு, ஆர்.எஸ்.புரம், கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் மாலை 6 மணிக்கு நடக்கிறது. இன்று, வழக்கறிஞர் சுமதி, 'சதாசிவ பிரம்மேந்திரர்' குறித்து பேசுகிறார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் குருபூஜை பெரியநாயக்கன்பாளையம், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் சார்பில், 86வது ராமகிருஷ்ணர் குருபூஜை நடக்கிறது. காலை 5 முதல் இரவு 8.15 மணி வரை, ஆரத்தி, பஜனை, கொடியேற்றம், கலை மற்றும் கல்விப்பொருட்காட்சி , நாமசங்கீர்த்தனம், கலை நிகழ்ச்சி, பொதுக்கூட்டம், இசைக்கச்சேரி ஆகிய நிகழ்வுகள் நடக்கின்றன.

மாதாந்திர அபிஷேக விழா கோவை நகரத்தார் இளைஞர் சங்கம் சார்பில், 651வது மாதாந்திர அபிஷேக விழா நடக்கிறது. பேரூர், பட்டீஸ்வரர் கோவில், பாலதண்டாயுதபாணி சன்னதியில், காலை 9 மணி முதல் அபிஷேக விழா நடக்கிறது.

பி.எஸ்.ஜி., காதம்பரி பி.எஸ்.ஜி., அண்ட் சன்ஸ் அறக்கட்டளை சார்பில், காதம்பரி இசை நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு பி.எஸ்.ஜி கலைக் கல்லுாரி கர்நாடக இசைத் துறை மாணவர்களின், 'தர்ம மார்க்கம்' இசை நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதனின் சிறப்பு கர்நாடக இசைக்கச்சேரி நடக்கிறது.

முதலீட்டாளர் மாநாடு கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தில் இண்டோ - ஜப்பான் முதலீட்டாளர் மாநாடு மாலை 4.30 முதல், இரவு 7 மணி வரை நடக்கிறது. இதில், கே.ஜி., மருத்துவமனையின் நிறுவனத் தலைவர் டாக்டர் பக்தவத்சலம் 'ஆரோக்கியம் -2026' என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.

ஏக தின லட்சார்ச்சனை கோவைப்புதுார், நஞ்ஜன்கூடு ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி மடத்தில் ஏக தின லட்சார்ச்சனை நடக்கிறது. ராகவேந்திர சுவாமி பக்தர்கள் கலந்து கொண்டு, ராகவேந்திரர் அருளைப் பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us