/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : செப் 20, 2024 10:30 PM

ராமாயணம் சொற்பொழிவு
ராம்நகர், கோதண்டராமசுவாமி தேவஸ்தானத்தில், 'நிர்வாண ராமாயணம் பகுதி-2' என்ற தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. காலை, 10:00 முதல் மதியம், 12:00 மணி வரை, பூஜ்ய ஸ்ரீ ரமண சரண தீர்த்த சுவாமிகள் உரையாற்றுகின்றார்.
திருக்கல்யாண உற்சவம்
போத்தனுார், எம்.ஜி.ஆர்., நகர், சப்தகிரி வேங்கடேஸ்வரர் கோவிலில், ஸ்ரீதேவி, பூதேவி சப்தகிரி வேங்கடேஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. மாலை, 4:30 முதல் 6:00 மணி வரை நடக்கும் விழாவில் பக்தர்கள் பங்கேற்று, திருக்கல்யாண அருளை பெறலாம்.
ஆன்மிக சொற்பொழிவு
ராம்நகர், சத்தியமூர்த்தி நகர், ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில், புரட்டாசி மாத ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. மாலை, 6:30 முதல் 8:30 மணி வரை, 'அருணாசல அனுபவம்' என்ற தலைப்பில், ஸ்ரீ ரமண சரண தீர்த்தர் நொச்சூர் சுவாமிகள் உரையாற்றுகிறார்.
வேலைவாய்ப்பு முகாம்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. ஈச்சனாரி ரத்தினம் கல்லுாரியில், காலை, 8:00 முதல் மாலை, 3:00 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
கைவினை கண்காட்சி
கிராப்ட் கவுன்சில் ஆப் தமிழ்நாடு சார்பில், 'சிருஷ்டி' கைவினைப்பொருட்கள் கண்காட்சி நடக்கிறது. ஆடைகள், அணிகலன்கள், அலங்கார பொருட்கள் உள்ளிட்ட பலவிதமான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவிநாசி ரோடு, சுகுணா திருமண மண்டபத்தில், காலை, 10:30 முதல் இரவு, 8:00 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது.
மெமரி கிளினிக் திறப்பு
பி.எஸ்.ஜி., மருத்துவமனையில் மெமரி மற்றும் டிமென்சியா கிளினிக் திறப்பு விழா நடக்கிறது. 'பி' பிளாக் கலையரங்கத்தில் காலை, 10:00 மணிக்கு நடக்கும் விழாவில், டிமென்சியா குறித்து விழிப்புணர்வு நிகழ்வும் நடக்கிறது.
மஹாதசல் விழா
கோவை சவுராஷ்ட்ரா சங்கத்தின் சார்பில், 18ம் ஆண்டு மஹாதசல் விழா, கோவை சண்முகா தியேட்டர் பின்புறமுள்ள லாரி உரிமையாளர்கள் டிரஸ்ட் மண்டபத்தில் நடக்கிறது. காலை, 5:00 முதல் 9:00 மணி வரை, கணபதி, ஹயக்ரீவர், மகாலட்சுமி, தன்வந்திரி நாராயண, சத்ய நாராயண, பெருமாள் வீதி உலா மற்றும் கோவிந்த பஜன் நடக்கிறது.
திறப்பு விழா
கார்மல் கார்டன் பள்ளியின் 60ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, புதிய பள்ளியின் முகப்பு வாயில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, இன்று காலை, 9:00 மணிக்கு நடக்கிறது. பள்ளியின் தலைவர் தாமஸ் திறந்து வைக்கிறார்.