/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : செப் 22, 2024 05:26 AM

வயது தடையில்லை
சாதனைக்கு வயது தடையில்லை என பலர் கூற கேட்டு இருப்போம். அதை நேரில் காண, கோவை நேரு மைதானத்தில் நடைபெறும் மூத்தோர் தடகள போட்டியை இன்று காணலாம். 30 வயது முதல் 95 வயதுடையவர்களுக்கான தடகள போட்டிகள் காலை, 7:00 மணி முதல் துவங்கவுள்ளன.
புதிய உதயம்
காரமடை காந்திநகர் அருகில், கே.சி.பி., கார்டன் திறப்பு விழா இன்று காலை,10:00 மணியளவில் நடைபெறவுள்ளது. டிவி பிரபலங்கள் மணிமேகலை, பாலா பங்கேற்கவுள்ளனர்.
வெற்றி சிந்தனைகள்
சூலுார் முத்துக்கவுண்டன்புதுார் விவேகானந்தர் அரங்கில், விழிப்புணர்வு சிறப்புரை, வெற்றி சிந்தனைகள் என்ற தலைப்பில் இன்று நடக்கிறது. சுவாமி விவேகானந்தர் இளைஞர்சக்தி இயக்கம் சார்பில், மாலை, 5:45 முதல் 8:00 மணி வரை நடைபெறவுள்ளது.
தமிழ் நெறிச்செம்மல்
நன்னெறிக்கழகம் சார்பில், ஆண்டுவிழா மற்றும் தமிழ் நெறிச்செம்மல் விருது வழங்கும் விழா மாலை, 6:30 மணியளவில் கிக்கானி பள்ளி அரங்கில் நடைபெறவுள்ளது.
விதைத்திருவிழா
தாய்மண் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் விதை சேகரிப்பாளர் கூட்டமைப்பு சார்பில், நாட்டு மாடுகளின் கண்காட்சி, விதைத்திருவிழா சிங்காநல்லுார் வரதராஜபுரம் கே.எஸ்.ஜி. கல்லுாரியில் நடைபெறவுள்ளது. காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை நிகழ்வுகள் நடைபெறும்.
நாம பாராயணம்
விஷ்ணு நாம பாராயண கமிட்டி சார்பில், இடையர்பாளையம் வி.ஆர்.ஜி. திருமண மஹாலில், நாம பாராயணம் நிகழ்வு நடைபெறவுள்ளது. காலை, 5:30 மணிக்கு கணபதி ஹோமம், 6:30 மணிக்கு கோ பூஜை, 7:00 மணி முதல் பாராயணம் நடக்கிறது.
மாணவர்கள் சங்கமம்
சின்னத்தடாகம் அரசு மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சங்கம நிகழ்வு காலை, 10:00 மணிக்கு பள்ளி அரங்கில் நடக்கிறது.
ராமாயணம் சொற்பொழிவு
ராம்நகர், கோதண்டராமசுவாமி தேவஸ்தானத்தில், 'நிர்வாண ராமாயணம் பகுதி-2' என்ற தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. காலை, 10:00 முதல் மதியம், 12:00 மணி வரை, பூஜ்ய ஸ்ரீ ரமண சரண தீர்த்த சுவாமிகள் உரையாற்றுகின்றார்.
ஆன்மிக சொற்பொழிவு
ராம்நகர், சத்தியமூர்த்தி நகர், ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில், புரட்டாசி மாத ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. மாலை, 6:30 முதல் 8:30 மணி வரை, 'அருணாசல அனுபவம்' என்ற தலைப்பில், ஸ்ரீ ரமணசரண தீர்த்தர் நொச்சூர் சுவாமிகள் உரையாற்றுகிறார்.