/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : செப் 29, 2024 01:35 AM

காக்க.. காக்க கருத்தரங்கு!
'தினமலர்' நாளிதழ் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில், காக்க.. காக்க கண், மனநலம் காக்க என்ற விழிப்புணர்வு கருத்தரங்கு, நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர்., ஆடிட்டோரியத்தில் நடைபெறுகிறது. காலை, 10:30 முதல் 12:30 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில், மருத்துவர்கள் விழிப்புணர்வு தகவல்களை பகிரவுள்ளனர். அனுமதி இலவசம்.
சந்தோஷ ஊற்று
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும், 'அருள் என்னும் சந்தோஷ ஊற்று' ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வு, ராம்நகர் ராமர் கோவிலில், மாலை, 6:30 மணிக்கு நடைபெறவுள்ளது.
விஷ்வாஸ் ஆண்டு சத்சங்
ரேஸ்கோர்ஸ் ஸ்ரீ சாரதாலயம் கோவிலில், விஷ்வாஸ் கோவை மற்றும் குளோபல் குழு சார்பில் ஆண்டு சத்சங் நடைபெறவுள்ளது. காலை, 4:00 முதல் மாலை, 4:00 மணி வரை பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
உழவர் தினவிழா
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், கடந்த மூன்று நாட்கள் நடந்து வரும், உழவர் தினவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. விவசாயிகளுக்கு பயன்படும் இயந்திரங்கள், தொழில்முனைவோரின் பல்வேறு தயாரிப்புகள் கண்காட்சியும் உள்ளதால், வீக் எண்ட் டைம் பாஸ் செய்வதற்கு, சரியான தேர்வாக இருக்கும்.
பரிசும் பாராட்டும்
தமிழ்நாடு செஸ் சங்கம் மற்றும் கோவை செஸ் சங்கம் சார்பில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்குதல் மற்றும் நிறைவு விழா, அலங்கார் ஹோட்டலில் மாலை, 3:00 மணிக்கு நடக்கிறது.
மூத்தோர் தடகள போட்டிகள்
கோவை மாவட்ட மாஸ்டர்ஸ் அத்லடிக் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான போட்டிகள் இன்று காலை, 8:00 மணி முதல், நேரு மைதானத்தில் துவங்கவுள்ளது.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கோவை அரசு கலை அறிவியல் கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள் தினவிழா, விருது வழங்கும் விழா இன்று காலை, 10:00 மணிக்கு துவங்குகிறது. கல்லுாரி வளாகத்தில் நிகழ்வுகள் நடைபெறுகிறது.
நுால் வெளியீட்டு விழா
'ஒரு கோப்பை தேநீருடன் நீ' என்ற தலைப்பில், நுால் வெளியீட்டு விழா, விஜயா பதிப்பகம் சார்பில், சுந்தராபுரம் செங்கப்பகோனார் மண்டபத்தில் இன்று மாலை, 5:30 மணியளவில் நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
மன உறுதியுடன் சிகிச்சை மேற்கொண்டால், குடிநோயிலிருந்து விடுபெறலாம். ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் சார்பில், டி.எஸ்., நர்சரி பள்ளி, சுண்டக்காமுத்துார் பகுதியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரையும் , டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் பகுதியில் மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை இலவச விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது.