/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : அக் 11, 2024 11:26 PM

நவராத்திரி திருவீதி உலா
சிட்கோ, குறிச்சி பேஸ் -2 பகுதியில் உள்ள ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி பெருந்திருவிழா நடக்கிறது. மாலை, 6:00 மணி முதல், மகா பேரொளி வழிபாடு, அம்மையப்பர் திருவீதி உலா நடக்கிறது. மாலை, 6:30 மணி முதல், மங்கள ஆர்த்தி, திருப்பொன்னுாஞ்சல், பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.
பகவத்கீதை சொற்பொழிவு
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் சார்பில், 'பர்வதவர்த்தினி' நினைவு ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. டாடாபாத், மூன்றாவது வீதியில் உள்ள ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷனில், மாலை, 5:00 மணிக்கு, 'பகவத்கீதை' என்ற தலைப்பில், சொற்பொழிவாளர் அவிநாசிலிங்கம் உரையாற்றுகிறார்.
நெய்குள தரிசனம்
ஈச்சனாரி, இ.எஸ்.வி.இ.இ., வளாகத்தில் உள்ள, ஜம்பாலா ரத்னாமாணிக்கம்மா டிரஸ்ட்டுக்கு உட்பட்ட ஆதி சிவன், வாராஹி அம்மன் கோவிலில், விஜயதசமியை முன்னிட்டு அம்மனுக்கு நெய்குள தரிசனம் நடக்கிறது. மாலை, 4:45 மணிக்கு, லலிதாம்பிகை அம்மனுக்கு நடைபெறும் நெய்குள தரிசனத்தில், பக்தர்கள் பங்கேற்கலாம்.
திருக்கல்யாண வைபவம்
வெள்ளலுார், கஞ்சிக்கோணம்பாளையத்தில் வள்ளி, தெய்வானை சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சிகள் காலை, 8:00 மணி முதல் நடக்கிறது. இரவு, 9:30 மணிக்கு திருக்கல்யாணமும் தொடர்ந்து, இளங்காளைகள் கிராமிய கலைக்குழுவின், வள்ளி திருமண அரங்கேற்ற விழாவும் நடக்கிறது.
பட்டமளிப்பு விழா
குனியமுத்துார், ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், 22வது பட்டமளிப்பு விழா, காலை, 10:45 மணிக்கு நடக்கிறது. அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தலைவர் சீதாராம் பங்கேற்கிறார்.
திருக்குறள் பயிலரங்கு
திருக்குறள் உலகம் கல்விச்சாலை சார்பில், திருக்குறள் பார்வையில், உறவுகளின் மேலாண்மை என்ற தலைப்பில் பயிலரங்கு நடக்கிறது. பூமார்க்கெட், சுவாமி விவேகானந்தர் இல்லப்பள்ளி வளாகத்தில், மாலை, 6:30 மணி முதல் பயிற்சி நடக்கிறது. அனைவரும் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.