/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : அக் 25, 2024 10:13 PM

ஆன்மிக சொற்பொழிவு
ராம்நகர் ராமர்கோவிலில், ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. காஞ்சிபுரம், காஞ்சி காமகோடி பீடம் சார்பில் நடக்கும் நிகழ்வில், காலை, 7:30 முதல் 11:30 மணி வரை, வேதவியாச பூஜையும், பிற்பகல், 3:00 முதல் 5:00 மணி வரை வேத பாராயணமும், இரவு, 7:00 மணிக்கு, வேதமும் ராமாயணமும், ராமாயணமும் தர்மோபதேசமும் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது.
கோவை பாடல் அறிமுகம்
கோவை விழாவின் ஒரு பகுதியாக, கோவையின் புதிய பாடல் அறிமுகம் செய்யப்படவுள்ளது. சரவணம்பட்டி, புரோசன் மாலில் மாலை, 5:30 மணிக்கு நடக்கும் விழாவில், நடிகர் சத்யராஜ் பாடலை அறிமுகம் செய்கிறார். கோவை கலெக்டர், போலீஸ் கமிஷனர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் கலந்து கொள்கின்றனர்.
கருத்தரங்கு
நவஇந்தியா, எஸ்.என்.ஆர்., கலையரங்கில், 'சோசியோ இன்னோவேஷன்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடக்கிறது. காலை, 9:30 மணிக்கு துவங்கும் நிகழ்வில் நீதிபதி சதாசிவம், கல்வியாளர் பாலகுருசாமி போன்ற சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றுகின்றனர்.
ஓவியக் கண்காட்சி
கஸ்துாரி சீனிவாசன் அறநிலையம் சார்பில் அவிநாசி ரோடு, கஸ்துாரி சீனிவாசன் கலைமையத்தில் ஓவியக்கண்காட்சி நடக்கிறது. சந்தோஷ் ராமனின், வுட் ஆர்ட் ஓவியங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்.
நீதிபதிகளுக்கு பயிற்சி
ரேஸ்கோர்ஸ், மாநில நீதித்துறை மண்டல பயிற்சி மையத்தில், மாநில நீதிபதிகளுக்கான பயிற்சி முகாம் இன்று துவங்குகிறது. காலை, 9:15 மணி முதல், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த நீதிபதிகளுக்கு, புதிய சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிரிப்பு பட்டிமன்றம்
சென்னை மீடியா சார்பில், நட்சத்திர பேச்சாளர்கள் கலந்துகொள்ளும், சிரிப்பு பட்டிமன்ற நிகழ்ச்சி நடக்கிறது. சுந்தராபுரம், எம்.எம்.செங்கப்பக்கோனார் திருமண மண்டபத்தில், மாலை, 5:30 மணிக்கு பட்டிமன்றம் துவங்குகிறது.
கேக் மிக்சிங் விழா
கிறிஸ்துமசை வரவேற்கும் விதமாக, பாரம்பரிய 150 கிலோ கேக் மிக்சிங் திருவிழ நடக்கிறது. அவிநாசி ரோடு, நீலாம்பூர், லீ மெரிடியனில், மாலை, 3:30 மணிக்கு கேக் மிக்சிங் விழா நடக்கிறது.
ஒயிலாட்ட அரங்கேற்றம்
கலைக்குழுவின் ஒயிலாட்ட அரங்கேற்ற விழா நடக்கிறது. கலிக்கநாயக்கன்பாளையம், தண்டுமாரியம்மன், மாகாளியம்மன் கோவிலில், மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது.
இலக்கிய அரங்கம்
கோவை மாவட்ட மைய நுாலகம், செம்மொழி தமிழ் மன்றம் இணைந்து, இலக்கிய அரங்கை நடத்துகின்றன. ஆர்.எஸ்.புரம் கோவை மாவட்ட மைய நுாலகத்தில், காலை, 10:00 மணிக்கு நடக்கும் நிகழ்வில் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.
திருக்குறள் பயிலரங்கு
திருக்குறள் உலகம் கல்விச்சாலை சார்பில், திருக்குறள் பார்வையில், 'உலகத்தின் பொருளாதாரம்' என்ற தலைப்பில் பயிலரங்கு நடக்கிறது. பூமார்க்கெட், சுவாமி விவேகானந்தர் இல்லப் பள்ளி வளாகத்தில், மாலை, 6:30 மணி முதல் பயிற்சி நடக்கிறது. அனைவரும் பங்கேற்கலாம், அனுமதி இலவசம்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.