/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : அக் 26, 2024 11:17 PM

பர்னிச்சர் எக்ஸ்போ
தீபாவளி போனஸ் வாங்கியாச்சு... வீட்டுக்கு ஏதாவது வாங்கணும்னு இருந்தா, கோவை கொடிசியா வளாகத்தில் நடக்கும் பர்னிச்சர் எக்ஸ்போ சரியான சாய்ஸ். நான்கு நாள் நடக்கும் எக்ஸ்போ, 28ம் தேதி நிறைவு பெறுகிறது. காலை, 10:30 மணி முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பாதி விலைக்கு பர்னிச்சர் அள்ளிச்செல்லலாம்.
மாவட்ட சதுரங்க போட்டி
சேரன் கல்விக்குழுமம் சார்பில், மாவட்ட அளவில் சதுரங்க போட்டி பேரூர் சாலையில் உள்ள எஸ்.எம்.எஸ்., கலை அறிவியல் கல்லுாரியில் நடைபெறவுள்ளது. போட்டிகள் வயது அடிப்படையில், நான்கு பிரிவுகளின் கீழ், இன்று காலை, 8:00 மணிக்கு துவங்கவுள்ளது.
இளம் சாணக்யா
முத்துக்கவுண்டன்புதுார் விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் மற்றும் ஞான சஞ்சீவனம் குருகுலமும் இணைந்து, குழந்தைகளின் தன்னம்பிக்கையை மேம்படுத்தும் வகையில், பயிற்சி அளிக்கப்படுகிறது. முத்துக்கவுண்டன்புதுார் விவேகானந்தர் அரங்கத்தில், காலை, 9:00 முதல் மாலை, 6:00 மணி வரை பயிற்சிகள் நடக்கஉள்ளன.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
குடும்பத்தின் மொத்த மகிழ்ச்சியையும் பறித்துவிடும், குடிநோய்க்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால், மீண்டுவிட முடியும். இதற்கான சிகிச்சை, ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் சார்பில், போத்தனுார் புனித ஜோசப் சர்ச், இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை நடக்கிறது.