/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : நவ 01, 2024 10:27 PM

சூரசம்ஹாரப் பெருவிழா
ஈச்சனாரி, கச்சியப்பர் மடாலய சேரிடபுள் டிரஸ்ட் சார்பில், 47ம் ஆண்டு மகா கந்த சஷ்டி சூரசம்ஹாரப் பெருவிழா இன்று துவங்குகிறது. காலை, 8:00 மணிக்கு, கணபதி வேள்வி, கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டும் நிகழ்வு நடக்கிறது.
பகவத்கீதை சொற்பொழிவு
ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேசன் சார்பில் ஆன்மீகச் சொற்பொழிவு மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. டாடாபாத், 104, மூன்றாவது வீதி, ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேசனில், 'பகவத்கீதை' தலைப்பில், சொற்பொழிவாளர் அவினாசிலிங்கம் உரையாற்றுகிறார்.
பரதநாட்டிய நிகழ்ச்சி
போத்தனுார், கோணவாய்க்கால்பாளையம், வள்ளி செல்வ முத்துக்குமாரா சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா துவங்குகிறது. காலை, 6:00 முதல் 7:30 மணி வரை, யாகசாலை பூஜை நடக்கிறது. மாலை, 5:00 மணி முதல், மகா அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு, நர்த்தகேஸ்வரர் நாட்டியாலயா வழங்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.
கந்த சஷ்டிப் பெருவிழா
சுக்கிரவார்பேட்டை, பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், 62வது ஆண்டு கந்த சஷ்டிப் பெருவிழா நடக்கிறது. காலை, 6:00 முதல் 7:00 மணிக்குள், காப்பு கட்டுதல், வேள்வி பூஜை நடக்கும். மாலை, 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரமும், இரவு 7:00 மணிக்கு, சஷ்டி விரதமும், முருகப்பெருமானும் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது.
திருக்குறள் பயிலரங்கு
திருக்குறள் உலகம் கல்விச்சாலை சார்பில், திருக்குறள் பார்வையில், 'உயிர் மேன்மைக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உணவின் பங்கு' என்றதலைப்பில் பயிலரங்கு நடக்கிறது. பூமார்க்கெட், சுவாமி விவேகானந்தர் இல்லப் பள்ளி வளாகத்தில், மாலை, 6:30 மணி முதல் பயிற்சி நடக்கிறது. அனைவரும் பங்கேற்கலாம், அனுமதி இலவசம்.
சஷ்டித் திருவிழா
சரவணபுரம் கவுமார மடாலயம் தண்டபானிக்கடவுள் கோவிலில், கந்த சஷ்டித் திருவிழா நடக்கிறது. காலை, 11:00 மணி முதல் மற்றும் மாலை, 6:30 மணி வரை, திருமுருகன் வேள்வி, லட்சார்ச்சனை, பேரொளி வழிபாடு நடக்கிறது. மருதமலைசுப்பிரமணியசுவாமி கோவிலில், காலை, 8:00 மணி முதல் கந்தசஷ்டி விழாவும் நடக்கிறது.