/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : நவ 09, 2024 12:33 AM

கந்தசஷ்டி விழா
ஈச்சனாரி, கச்சியப்பர் மடாலய சேரிடபுள் டிரஸ்ட் சார்பில், திருச்செந்தில் கோட்டத்தில் 47ம் ஆண்டு மகா கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது. இறுதி நாளான இன்று, காலை, 11:00 மணி முதல், மஞ்சள் நீராட்டு விழா மற்றும் உற்சவர் திருவீதி உலா நடக்கிறது.
பகவத்கீதை சொற்பொழிவு
ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேசன் சார்பில் ஆன்மீக சொற்பொழிவு மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. டாடாபாத், 104, மூன்றாவது வீதி, ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேசனில், 'பகவத்கீதை' தலைப்பில், சொற்பொழிவாளர் அவினாசிலிங்கம் உரையாற்றுகிறார்.
திருவீதி உலா
சுக்கிரவார்பேட்டை, பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், கந்த சஷ்டிப் பெருவிழா நடக்கிறது. காலை, 6:30 முதல் மதியம், 12:30 மணி வரை, அபிஷேகம், சண்முகார்ச்சனை, மகா தீபாராதனை நடக்கிறது. மாலை, 5:00 மணி முதல், சந்தனக்காப்பு, தீபாராதனை, சுவாமி திருவீதி உலா, மஞ்சள் நீராடல் நடக்கிறது.
பட்டமளிப்பு விழா
சுங்கம் நிர்மலா மகளிர் கல்லுாரியில், 40வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. கல்லுாரி கலையரங்கில் காலை, 10:00 மணிக்கு விழா நடக்கிறது. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் உறுப்பினர் செயலாளரான வின்சென்ட் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.
ஓவியப் போட்டி
கோவை விழாவை முன்னிட்டு மாபெரும் ஓவியப் போட்டி இன்று நடக்கிறது. அவிநாசி ரோடு, சுகுணா திருமண மண்டபத்தில் காலை, 10:00 மணிக்கு போட்டி துவங்குகிறது. 200க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
தொழில்முனைவோர் தினம்
பிச்சனுார், ஜே.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் பெட்ரோலியம் பொறியியல்துறை சார்பில், தொழில்முனைவோர் மேம்பாட்டு தினம் கொண்டாடப்படுகிறது. கல்லுாரி வளாகத்தில், காலை, 10:00 மணிக்கு விழா நடக்கிறது.
திருக்குறள் பயிலரங்கு
திருக்குறள் உலகம் கல்விச்சாலை சார்பில், திருக்குறள் பார்வையில், 'மேன்மைக்குரிய ஏழு தலைமைப் பண்புகள்' என்ற தலைப்பில் பயிலரங்கு நடக்கிறது. பூமார்க்கெட், சுவாமி விவேகானந்தர் இல்லப் பள்ளி வளாகத்தில், மாலை, 6:30 மணி முதல் பயிற்சி நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.