/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஜன 06, 2024 12:46 AM

ஆன்மிக சொற்பொழிவு
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், 'எப்போ வருவாரோ' ஆன்மிக தொடர் சொற்பொழிவு, ஆர்.எஸ்.புரம், கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் மாலை, 6:30 மணிக்கு நடக்கிறது. இதில்,ராமசுப்பிரமணியன், 'சத்ய சாய்பாபா' பற்றி பேசுகிறார். மாலை, 6:00 மணிக்கு, அருளிசையுடன் சொற்பொழிவு துவங்குகிறது.
காதம்பரி இசை நிகழ்ச்சி
பி.எஸ்.ஜி., சன்ஸ் அறக்கட்டளை சார்பில், வளர்ந்து வரும் இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், 'காதம்பரி' எனும் இசை நிகழ்ச்சி நடக்கிறது. பி.எஸ்.ஜி., மருத்துவமனை வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில், மாலை, 5:00 முதல் 8:30 மணி வரைநிகழ்ச்சி நடைபெறுகிறது.
பகவத்கீதை சொற்பொழிவு
'நான்' என்ற அகந்தையை கைவிட்டு, எல்லையற்ற பேரின்பத்தில் மகிழ்வுறு என போதிக்கும் பகவத்கீதை, வாழ்வை ஆராதித்து வாழ கற்றுத்தருகிறது. அன்னுார், கரிவரதராஜ பெருமாள் கோவிலில், மாலை, 6:00 முதல், 7:00 மணி வரை, 'பகவத்கீதை' சொற்பொழிவு நடக்கிறது.
தர்மசாஸ்தா மகோற்சவம்
சபரீச சேவா சங்கம் சார்பில், தர்மசாஸ்தா மகோற்சவம், இடையர்பாளையம், ராஜலட்சுமி ஹாலில் நடக்கிறது. காலை, 6:00 மணி முதல், கணபதி ஹோம், அபிஷேகம், அலங்காரம், பஜன் மண்டலி நடக்கிறது. மதியம், 12:30 முதல் இரவு, 8:00 மணி வரை, திருமாங்கல்யதாரணம், தர்மசாஸ்தா நகர்வலம், நாமசங்கீர்த்தனம் நடக்கிறது.
இலக்கிய விழா
தி வராண்டா கிளப் சார்பில், குழந்தைகள் இலக்கியம் மற்றும் கலை திருவிழா நடக்கிறது. ஒலம்பஸ், குருக்மணி நகரிலுள்ள, பிரக்ரியா சர்வதேச பள்ளியில் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், ஆறு முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகள் பங்கேற்கலாம். ஆத்தர் ரீடிங், கதை சொல்லுதல், பயிலரங்கு, இசை, நடனம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
சித்திரம் பேசுதடி
நித்தியாலயம் அறக்கட்டளை சார்பில், மாற்றுத்திறன் கலைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில், சித்திரம் பேசுதடி நிகழ்ச்சி நடக்கிறது. ரேஸ்கோர்ஸ், ஆர்ட் வீதியில், காலை, 10:00 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது. இதில், ஓவிய கண்காட்சி மற்றும் விற்பனையும் நடக்கிறது.
தொழில்முனைவோர் கருத்தரங்கு
அவிநாசி ரோடு, கொடிசியாவில் 'மிகுதியை உணர்' என்ற தலைப்பில், தொழில்முனைவோர்கருத்தரங்கு நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு நடக்கும் நிகழ்வில், இளம் தொழில்முனைவோர் தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து வழிகாட்டப்படுகிறது.
'குடி'நோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரமில் நடக்கிறது. இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை, முகாம் நடக்கிறது.
வோளண் திருவிழா
எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டிலுள்ள, ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில், வேளாண் திருவிழா காலை, 5:00 மணி முதல் நடக்கிறது. இதில், வேளாண் பொருள்கள், நாட்டுப்பற கலாசாரம்,காங்கயம் கால்நடைகள் மற்றும் நாட்டு நாய் ஆகியவற்றின் கண்காட்சிநடக்கிறது. பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
பட்டமளிப்பு விழா
திருமலையம்பாளையம், நேரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 22வது பட்டமளிப்பு விழா, காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. இதேபோல், குனியமுத்துார், ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், 21வது பட்டமளிப்பு விழா, காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.
ஆண்டு விழா
மேட்டுப்பாளையம் ரோடு, அமிரித் சென்டர் பார் ஸ்பெஷல் நீட்ஸ் பள்ளியில், ஆண்டு விழா நடக்கிறது. பள்ளிவளாகத்தில், மாலை, 5:30 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது.
* பி.எஸ்.ஜி., மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளில் பொங்கல் விழா காலை, 8:00 மணிக்கு நடக்கிறது.
சிறப்பு முகாம்
'மக்களுடன் முதல்வர்' என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களின் குறைகளை கேட்கும் பொருட்டு, சிறப்பு முகாம் நடக்கிறது. ஜி.எம்.நகர், அன்பு இல்லத்தில், காலை, 9:00 முதல் மாலை, 3:00 மணி வரை முகாம் நடக்கிறது.