/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஜன 06, 2024 11:02 PM

ஆன்மிக சொற்பொழிவு
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், 'எப்போ வருவாரோ' ஆன்மிக தொடர் சொற்பொழிவு, ஆர்.எஸ்.புரம், கிக்கானி மேல்நிலைப்பள்ளியில், மாலை, 6:30 மணிக்கு நடக்கிறது. இன்று, திருப்பூர் கிருஷ்ணன், பாண்டிச்சேரி அன்னை பற்றி பேசுகிறார். மாலை, 6:00 மணிக்கு, அருளிசையுடன் சொற்பொழிவு துவங்குகிறது.
சிறப்பு ஹோமம்
தமிழ்நாடு பிராமணர் சங்கம் மற்றும் ஞானம் பவுண்டேசன் சார்பில், கணபதி, நவகிரகமற்றும் மிருத்யுஞ்சய ஹோமங்கள் நடக்கின்றன. வடவள்ளி, நியூ ஹேப்பி கார்டன், தாம்ப்ராஸ் கட்டடத்தில், காலை, 8:00 முதல் 10:30 மணி வரை ஹோமங்கள் நடக்கின்றன.
காதம்பரி இசை நிகழ்ச்சி
பி.எஸ்.ஜி., சன்ஸ் அறக்கட்டளை சார்பில், வளர்ந்து வரும் இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், 'காதம்பரி' எனும் இசை நிகழ்ச்சி நடக்கிறது. பி.எஸ்.ஜி., மருத்துவமனை வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில், மாலை, 5:00 முதல் 8:30 மணி வரை நடைபெறுகிறது.
கோவை புராணம்
கோவை விழா மற்றும் பெர்க்ஸ் மெட்ரிக் பள்ளி சார்பில்,'கோவை புராணம்' என்ற ஆவணப்படம் திரையிடப்படுகிறது. கோவை வரலாறு பற்றிய இந்த ஆவணப்படம், பள்ளி வளாகத்தில், மாலை, 6:00 மணிக்கு திரையிடப்படுகிறது.
தரிசன விழா
ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை சார்பில், மேட்டுப்பாளையம் ரோடு, சாய்பாபா கோவிலில், தரிசன விழா நடக்கிறது. காலை, 5:00 முதல் மதியம், 1:00 மணி வரை, காகட ஆரத்தி, ஹோமம், பூர்ணாஹூதி, நாகசாயி பஜன்,பிரசாத விநியோகம் நடக்கிறது. மாலை, 6:00 முதல் இரவு, 8:30 மணி முதல், துாப ஆரத்தி, நாகசாயி பஜன் ஆகியவை நடக்கிறது.
இலக்கிய விழா
தி வராண்டா கிளப் சார்பில், குழந்தைகள் இலக்கியம் மற்றும் கலை திருவிழா நடக்கிறது. ஒலம்பஸ், குருக்மணி நகரிலுள்ள, பிரக்ரியா சர்வதோ பள்ளியில் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், ஆறு முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகள் கலந்துகொள்ளலாம்.
வேளாண் திருவிழா
எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டிலுள்ள, ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில், வேளாண் திருவிழா காலை, 5:00 மணி முதல் நடக்கிறது. ரேக்ளா பந்தயம், வேளாண் பொருட்கள், நாட்டுப்புற கலாசாரம், காங்கயம் கால்நடைகள் மற்றும் நாட்டு நாய் கண்காட்சியும் நடக்கிறது. பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
ஆண்டு விழா
ஸ்ரீ தர்ம சாஸ்தா பூஜா சங்கம் சார்பில், 74வது ஆண்டு விழா நடக்கிறது. ஆர்.எஸ்.புரம், சுப்ரமணியம் ரோடு, பலிஜாநாயுடு திருமண மண்டபத்தில், காலை, 5:00 முதல் மதியம், 12:00 மணி வரை, கணபதி ஹோமம், தர்மசாஸ்தா ஆவாஹனம், மகன்யாச ருத்ரஜபம், பஜனை பாடல்கள், புஷ்பாஞ்சலி தீபாராதனை, அன்னதானம் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை, 6:00 மணிக்கு பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.
ஆரோக்கியமான கோவை
கோவை விழா சார்பில், ஆரோக்கியமான கோவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில், மராத்தான் போட்டி நடக்கிறது. நேரு ஸ்டேடியத்தில், காலை, 6:00 மணிக்கு போட்டி துவங்குகிறது. இதில், குழந்தைகள், பெரியவர்கள், குடும்பங்கள் என தனித்தனி பிரிவுகளில்,5 ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ளனர்.
தர்மசாஸ்தா மகோற்சவம்
சபரீச சேவா சங்கம் சார்பில், தர்மசாஸ்தா மகோற்சவம், இடையர்பாளையம், ராஜாலட்சுமி ஹாலில் நடக்கிறது. காலை, 6:00 முதல் 9:00 மணி வரை, சாஸ்தா மூல மந்திரஜபம், சங்காபிஷேகம், அஷ்டாபிஷேகம், ருத்ராபிஷேகம், நாமசங்கீர்த்தனம் நடக்கிறது. காலை, 11:30 முதல் 1:00 மணி வரை, மகா தீபாராதனை மற்றும் அன்னதானம் நடக்கிறது.
ரேடியோ ஜாக்கி பயிற்சி
ரேடியோ ஜாக்கி ஆவது, உங்கள் கனவா? இதோ, உங்களுக்கான வாய்ப்பு. டவுன்ஹால், குருகுலம் இன்டர்நேசனல் இன்ஸ்டியூட் சார்பில், ரேடியோ ஜாக்கி குறித்த ஒரு நாள் பயிற்சி நடக்கிறது. இன்ஸ்டியூட் வளாகத்தில், காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை பயிற்சி நடக்கிறது.
அமைதியின் அனுபவம்
அண்ணாதுரை சாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங் நடக்கிறது.
'குடி'நோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.