/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : பிப் 04, 2024 12:22 AM

பிரம்ம கானாஞ்சலி
ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில், ஸ்ரீ தியாகப் பிரம்ம கானாஞ்சலி, 70ம் ஆண்டு உற்சவம் நடக்கிறது. மாலை, 6:15 மணிக்கு, வயலின், மிருதங்கம், கடம் இசைக்கலைஞர்களின் இசையுடன், மல்லாடி சகோதரர்கள் பாடல் பாடுகின்றனர்.
அபிஷேக விழா
கோவை நகரத்தார் இளைஞர் சங்கம் சார்பில், 628வது மாதாந்திர அபிஷேக விழா நடக்கிறது. பேரூர் பட்டீஸ்வரசுவாமி கோவிலில், காலை, 10:15 மணிக்கு விழா நடக்கிறது. பக்தர்கள் குடும்பத்தினருடன் கலந்துகொள்ளலாம்.
களப்பணி
சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு மற்றும் கவுசிகா நீர்க்கரங்கள் சார்பில், நீர்நிலைகளை மீட்டெடுக்கும் தொடர் பணி நடந்து வருகிறது. அந்த வகையில் சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பு சார்பில், 304வது வார களப்பணி நடக்கிறது. இன்று காலை, 7:00 முதல் 9:00 மணி வரை நடக்கும் பணியில், ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம்.
பாராட்டு விழா
விஜயா பதிப்பகம் சார்பில், 'நீர்வழிப் படூஉம்' நுாலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தேவிபாரதிக்கு, பாராட்டு விழா நடக்கிறது. ராஜவீதி, விஜயா பதிப்பகத்தின் ரோஜா முத்தையா அரங்கில், காலை, 10:00 மணிக்கு விழா நடக்கிறது.
கைவினை கண்காட்சி
கலைநயமிக்க கைவினை பொருட்கள் மீது, தீரா காதல் கொண்டவரா நீங்கள். அப்ப, உங்களுக்கான கண்காட்சிதான் இது. அவிநாசி ரோடு, மீனாட்சி ஹாலில், பலவிதமான கைவினைபொருட்களின் கண்காட்சி நடக்கிறது. காலை, 10:30 முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கும் கண்காட்சியை பார்வையிட, அனுமதி இலவசம்.
பரிசளிப்பு விழா
உலக தமிழ் நெறிக்கழகம், திருக்குறள் உலகம் கல்விச்சாலை சார்பில், திருக்குறள் முத்தமிழ் விழா நடந்தது. இதில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, திருக்குறள் முத்தமிழ் போட்டி நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, தேவாங்கப் பள்ளி அருகில், சன்மார்க்கச் சங்கத்தில், காலை, 9:30 மணி முதல் நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.
தேசிய பட்டு கண்காட்சி
இந்தியாவின் மிகப்பெரும் பருத்தி மற்றும் பட்டு கண்காட்சி, அவிநாசி சுகுணா திருமண மண்டபத்தில் நடக்கிறது. சில்க், காட்டன், டிசைனர், எத்தினிக் என ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட சேலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. காலை, 11:00 முதல், இரவு, 9:00 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்.
அமைதியின் அனுபவம்
தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது.
'உயிர்சூழல்' விவசாய கண்காட்சி
கிருஷி ஜனனி அமைப்பு சார்பில், இயற்கை விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும், 'உயிர்சூழல்' விவசாய தொழில்நுட்ப கண்காட்சி, சின்னவேடம்பட்டி, குமரகுரு கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது. இந்தியா முழுவதிலும் இருந்து, 30க்கும் மேற்பட்ட வேளாண் நிபுணர்களும், தொழில்நுட்ப வல்லுனர்களும் கலந்துகொண்டு, தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.