sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

/

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்


ADDED : பிப் 10, 2024 12:23 AM

Google News

ADDED : பிப் 10, 2024 12:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பகவத்கீதை சொற்பொழிவு


நான் என்ற அகந்தையை கைவிட்டு, எல்லையற்ற பேரின்பத்தில் மகிழ்வுறு என போதிக்கும் பகவத்கீதை, வாழ்வை ஆராதித்து வாழ கற்றுத்தருகிறது. அன்னுார், கரிவரதராஜ பெருமாள் கோவிலில், மாலை, 6:00 முதல், 7:00 மணி வரை, 'பகவத்கீதை' சொற்பொழிவு நடக்கிறது.

சங்கமம் திருவிழா


கலை பண்பாட்டுத்துறை சார்பில், கோவை சங்கமம் மற்றும் நம்ம ஊரு திருவிழா நடக்கிறது. நையாண்டி மேளம், தோடர் நடனம், துடும்பாட்டம், பரதநாட்டியம், சிலம்பாட்டம், நாட்டுப்புற கலை, நாட்டிய நாடகம், வள்ளிகும்மி ஆகியவை நடக்கிறது. வ.உ.சி., மைதானத்தில், மாலை, 6:00 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது.

வீட்டுக்கடன் கண்காட்சி


ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில், வீட்டுக் கடன் கண்காட்சி நடக்கிறது. முன்னணி பில்டர்கள் கண்காட்சியில் தங்களது அரங்கங்களை அமைத்துள்ளனர். கவுண்டம்பாளையம், கல்பனா திருமண மண்டபத்தில் கண்காட்சி நடக்கிறது. காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை நடைபெறும்.

உயர்ந்த பக்தி எது?


அபங்க சங்கீர்த்தனம் ஹரிகதை, உயர்ந்த பக்தி எது? என்ற தலைப்பில் நடக்கிறது. ஸ்ரீ ரகுநாத்தாஸ் மஹராஜ் சொற்பொழிவாற்றுகிறார். ராம்நகர், சத்தியமூர்த்த்தி ரோடு, ஸ்ரீ ராமலட்சுமி ஹாலில், மாலை, 6:30 மணிக்கு நடக்கிறது. அனைவரும் கலந்துகொள்ளலாம்.

புரந்தரதாசர் ஆராதனை


பி.என்.ராகவேந்திரா ராவ் மெமோரியல் டிரஸ்ட் சார்பில், புரந்தரதாசர் ஆராதனை நடக்கிறது. ஆர்.எஸ்.புரம், புரந்தரதாசர் கலையரங்கத்தில், மாலை, 6:30 மணிக்கு நடக்கிறது. இன்று, கடையநல்லுார், துக்காராம் கணபதி மகராஜ் குழுவினர் நாமசங்கீர்த்தனம் நிகழ்த்துகின்றனர்.

ஒயிலாட்ட அரங்கேற்ற விழா


பேரூர், நரசீபுரம், சங்கமம் கலைக்குழுவின் ஒயிலாட்ட அரங்கேற்ற விழா நடக்கிறது. நரசீபுரம், அரசு மேல்நிலைப்பள்ளியில், மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. சுதந்திர தியாகிகளுக்கு அஞ்சலி, ஒயிலாட்ட உறுதிமொழி மற்றும் அரங்கேற்ற நிகழ்வு ஆகியவை நடக்கிறது.

குண்டம் திருவிழா


இடையர்பாளையம், வெள்ளலுார், கொண்டத்து மாகாளியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா நடக்கிறது. காலை, ஜன.,30ம் தேதிக்கு சாமி சாட்டுதலுடன் துவங்கிய விழாவில் அக்னி சாட்டு, 108 திருவிளக்கு வழிபாடு ஆகியவை நடந்தது. இன்று, மாலை, 5:00 மணி முதல், தீர்த்த காவடிகள் பூஜை நடக்கிறது.

பட்டமளிப்பு விழா


சரவணம்பட்டி, கே.ஜி.ஐ.எஸ்.எல்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 15வது பட்டமளிப்பு விழா, காலை, 9:30 மணிக்கு நடக்கிறது. விஞ்ஞானி கரிமா குப்தா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பட்டங்களை வழங்கி கவுரவிக்கிறார்.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்


தொடர்ச்சியான சிகிச்சை மூலம், குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளியில் நடக்கிறது. இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை, முகாம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us