/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : பிப் 17, 2024 02:13 AM

நாமசங்கீர்த்தனம்
கவுண்டம்பாளையம், ஜெய் நகர், ஜி.வி.கண்ணன் ரெசிடென்சியில், காலை, 10:00 முதல் மதியம், 12:30 மணி வரை, நாமசங்கீர்த்தனம் நடக்கிறது. மதுரை, ஸ்ரீசக்ர ராஜராஜேஸ்வரி பீடம், பூஜ்யஸ்ரீ ராமானந்த சரஸ்வதி மகாசுவாமிகள் இதில் கலந்து கொள்கிறார்.
மகாருத்ர யக்ஞம்
ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானத்தில், மகாருத்ர யக்ஞம் நடக்கிறது. காலை, 6:00 முதல், 11:00 மணி வரை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், மஹன்யாச ஜபம், ருத்ர ஆவாஹனம், ருத்ராபிஷேகம், கோ பூஜை ஆகியவை நடக்கிறது. ஸ்ரீ ருத்ர ஹோமம், வசோர்த்தாரை, தம்பதி பூஜை, கலசாபிஷேகம், மகா தீபாராதனை, பிரசாத விநியோகம் ஆகியவை நடக்கிறது.
சங்கர விஜயம் திருவிழா
ஸ்ரீ ஆதிசங்கரின் உபதேசங்கள், அனைவரையும் சென்றடையும் நோக்கில், வரும் 18ம் தேதி வரை, 'சங்கர விஜயம்' திருவிழா நடக்கிறது. கோவை ரேஸ்கோர்ஸ், சாரதாம்பாள் கோவில் வளாகத்தில் உள்ள சாரதாலயத்தில், காலை, 9:30 மணி முதல், இரவு, 8:30 மணி வரை விழா நடக்கிறது.
குண்டம் திருவிழா
வெள்ளலுார், கொண்டத்து மாகாளியம்மன் கோவிலில், 164வது குண்டம் திருவிழா கடந்த 14ம் தேதி விமர்சையாக நடந்தது. இரவு, 7:00 மணி முதல், அபிஷேக, ஆராதனை மற்றும் சான்றோர்க்கு மரியாதை செய்தல் ஆகியவை நடக்கிறது.
திருத்தேர்ப் பெருவிழா
மேட்டுப்பாளையம், காரமடை, அரங்கநாதசுவாமி கோவிலில், திருத்தேர்ப்பெருவிழா நடக்கிறது. இரவு, 11:00 மணி முதல், கிராமசாந்தி, திருமுனை நகர சோதனை ஆகியவை நடக்கிறது.
பகவத்கீதை சொற்பொழிவு
நான் என்ற அகந்தையை கைவிட்டு, எல்லையற்ற பேரின்பத்தில் மகிழ்வுறு என போதிக்கும் பகவத்கீதை, வாழ்வை ஆராதித்து வாழ கற்றுத்தருகிறது. அன்னுார், கரிவரதராஜ பெருமாள் கோவிலில், மாலை, 6:00 முதல், 7:00 மணி வரை, 'பகவத்கீதை' சொற்பொழிவு நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
தொடர்ச்சியான சிகிச்சை மூலம், குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளியில் நடக்கிறது. இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை, முகாம் நடக்கிறது.
ஸ்டைல் பஜார் கண்காட்சி
டிரெண்டிங் அப்டேட்டுடன் வந்துவிட்டது, 'ஸ்டைல் பஜார்' ஷாப்பிங் கண்காட்சி. இதில், ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் அலங்கார பொருட்கள் முன்னணி டிசைனர்கள் தனித்துவமிக்க டிசைனர் மற்றும் லைப்ஸ்டைல் பேஷன் பொருட்களை காட்சிப்படுத்துகின்றனர். அவிநாசி ரோடு, தி ரெசிடென்சி டவர்சில், காலை, 10:00 முதல் இரவு, 9:00 மணி வரை, கண்காட்சி நடைபெறும்.
இரவு மராத்தான்
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி, இரவு நேர மராத்தான் நடக்கிறது. வ.உ.சி., மைதானத்தில், மாலை, 6:30 மணிக்கு மராத்தான் துவங்குகிறது. இதில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கின்றனர்.