/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : பிப் 18, 2024 12:34 AM

சங்கர விஜயம் திருவிழா
ஸ்ரீ ஆதிசங்கரரின் உபதேசங்கள், அனைவருக்கும் சென்றடையும் நோக்கில், கடந்த பிப்.,14ம் தேதி முதல், 'சங்கர விஜயம்' திருவிழா கோவையில் நடக்கிறது. ரேஸ்கோர்ஸ், சாரதாம்பாள் கோவில் வளாகத்தில் உள்ள சாரதாலயத்தில், மாலை, 3:00 மணி முதல், ஆதி சங்கரர் குறித்து வினாடி - வினா போட்டியும், மாலை, 6:00 மணிக்கு, சிறப்பு பரதநாட்டியமும் நடக்கிறது.
நிர்வாண ராமாயணம்
ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானத்தில், ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. அபிநவ வித்யா தீர்த்த பிரவசன மண்டபத்தில், மாலை, 6:30 முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கிறது. 'நிர்வாண ராமாயணம்' என்ற பெயரில், பூஜ்ய ஸ்ரீ ரமண சரண தீர்த்த சுவாமிகள் உரையாற்றுகிறார்.
திருத்தேர்ப் பெருவிழா
கோவையில் உள்ள வைணவத் தலைங்களில் பிரசித்தி பெற்ற, மேட்டுப்பாளையம், காரமடை, அரங்கநாதசுவாமி கோவிலில், திருத்தேர்ப்பெருவிழா நடக்கிறது. காலை, 11:15 மணிக்கு, திருக்கொடியேற்றம் நடக்கிறது. இரவு, 8:30 மணிக்கு, அன்னவாகன உற்சவம் நடக்கிறது.
ராமர் கோவில் மீட்பின் வரலாறு
சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில், 'அயோத்தி ராமர் கோவில் மீட்பு' என்ற பெயரில் சிறப்புரை நடக்கிறது. முத்துக்கவுண்டன் புதுார், சுவாமி விவேகானந்தர் அரங்கில், மாலை, 5:45 மணி முதல் நிகழ்ச்சி நடக்கிறது. குழந்தைகள், பெரியவர்கள் என குடும்பமாக நிகழ்வில் கலந்துகொள்ளலாம்.
ஓவியக் கண்காட்சி
ஒரு நொடி ரசிப்பில், புதுமை உலகில் லயிக்க வைக்கும் ஆற்றல் கொண்டவை ஓவியங்கள். ஓவிய உலகில் நீங்களும் லயிக்க, தொண்டாமுத்துார், ஆர்ட்டிரெண்ட்ஸ் ஆர்ட் கேலரிக்கு விசிட் அடிக்கலாம். இங்கு, காலை, 11:00 முதல், மாலை, 4:00 மணி வரை, ஓவியக் கண்காட்சி நடக்கிறது.
ஸ்டைல் பஜார் கண்காட்சி
டிரெண்டிங் அப்டேட்டுடன் வந்துவிட்டது,'ஸ்டைல் பஜார்' ஷாப்பிங் கண்காட்சி. இதில், ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் அலங்கார பொருட்கள் என, முன்னணி டிசைனர்கள் தனித்துவமிக்க டிசைனர் மற்றும் லைப் ஸ்டைல் பேஷன் பொருட்களை காட்சிப்படுத்துகின்றனர். அவிநாசி ரோடு, தி ரெசிடென்சி டவர்சில், காலை, 10:00 முதல் இரவு, 9:00 மணி வரை, கண்காட்சி நடக்கிறது.
அமைதியின் அனுபவம்
தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம், மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது.
படைப்புலக திறனாய்வுரை
தமிழ் இலக்கியப் பலகை சார்பில், படைப்புலக திறனாய்வுரை நிகழ்ச்சி, காந்திபூங்கா மாரண்ண கவுடர் உயர்நிலைப்பள்ளியில், காலை 10:00 மணிக்கு நடக்கிறது. இதில், எழுத்தாளர் சுப்ரபாரதி மணியனின், படைப்புலகம் குறித்து இலக்கிய ஆர்வலர்கள் பேசுகின்றனர். தமிழ்க்காப்புக் கூட்டியக்க தலைவர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.நர்சரி பள்ளியில், காலை 10:30 முதல் மதியம், 12:00 மணி ரை நடக்கிறது.
குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில் மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.