sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

/

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்


ADDED : மார் 02, 2024 10:41 PM

Google News

ADDED : மார் 02, 2024 10:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போலியோ சொட்டு மருந்து முகாம்


சுந்தராபுரம்,'தினமலர்' நாளிதழ் அலுவலகத்தில், இன்று காலை, 7:00 முதல் மாலை, 5:00 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. முகாமில், பிறந்த குழந்தை முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டுகளிலும் இதற்கான முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

சாஸ்தா ப்ரீதி


ராம்நகர், ஐயப்பன் பூஜா சங்கம் சார்பில், சாஸ்தா ப்ரீதி நடக்கிறது. காலை, 9:30 மணிக்கு, தேவதா ஆவாஹனம் பூஜை மற்றும் நாமசங்கீர்த்தனம், வரவு பாட்டு நடக்கிறது. மதியம் 12:30 மணிக்கு, மகா தீபாராதனை மற்றும் பக்த போஜனம் நடக்கிறது.

தேர்த்திருவிழா


பெரியகடை வீதி, கோனியம்மன் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் காலை, 6:30 மணிக்கு நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு பரதாட்டியம் நடக்கிறது.

நுால் வெளியீட்டு விழா


கோவை அபயம் பப்ளிஷர்ஸ் சார்பில், சுவாமி மணிசங்கரானந்தா எழுதிய, மாண்டூத்ய உபநிஷத் நுால் வெளியீட்டு விழா நடக்கிறது. ஆர்.எஸ்.புரம், இன்டக்ரல் யோகா இன்ஸ்டிட்யூட்டில், மாலை, 5:00 மணிக்கு நுால் வெளியிடப்படுகிறது.

ஓவியக்கண்காட்சி


அவிநாசி ரோடு, கஸ்துாரி சீனிவாசன் கலைமையம் சார்பில், 'இயற்கை மற்றும் லைப்' என்ற தலைப்பில், ஓவியக் கண்காட்சி நடக்கிறது. காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை ஓவியங்களை ரசிக்கலாம்.

ஆராதனை விழா


சத்குரு ஸ்ரீ தியாகராஜா டிரஸ்ட் சார்பில், ஆராதனை விழா மற்றும் மும்மூர்த்திகள் மகோற்சவம் நடக்கிறது. ராம்நகர், ராமர்கோவிலில், காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை, விழா நடக்கிறது. இசை கலைஞர்கள் மற்றும் மாணவர்கள், பல்வேறு இசை நிகழ்வுகளை அரங்கேற்றுகின்றனர்.

லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம்


தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம் மற்றும் வித்யா பூஜை நடக்கிறது. கல்வி மற்றும் வேலை, தொழிலில் பொதுமக்கள் உயர்நிலை அடைய இந்த பூஜை நடத்தப்படுகிறது. கணபதி, அத்தனுார் அம்மன் கோவில் வளாகத்தில், காலை, 9:00 மணிக்கு பூஜை நடக்கிறது.

கைவினை கண்காட்சி


இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி சார்பில், அவிநாசி ரோடு, சுகுணா திருமண மண்படத்தில், கைவினைபொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது. காலை, 10:00 முதல், இரவு, 9:30 மணி வரை நடைபெறும் கண்காட்சியில் கலைநயமிக்க கைவினை பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஐவர் கால்பந்து திருவிழா


கோவைப்புதுார் இளைஞர் நலச்சங்கம் சார்பில், மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான, ஐவர் கால்பந்து திருவிழா நடக்கிறது. 'ஏ' கிரவுண்ட், கோவைப்புதுாரில் போட்டிகள், காலை, 9:30 மணி முதல் நடக்கிறது.

இலக்கிய சந்திப்பு


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனொரு பகுதியாக, சிறப்பு இலக்கிய அமர்வு நடக்கிறது. ரயில்நிலையம் ரோடு, தாமஸ் கிளப்பில் காலை, 11:00 மணிக்கு இலக்கிய சந்திப்பு நடக்கிறது.

விழிப்புணர்வு மராத்தான்


கே.சி.டி., பிசினஸ் பள்ளி சார்பில், 'ரன் பார் நேட்டிவ் டிரைப்ஸ்' என்ற தலைப்பில், மராத்தான் நடக்கிறது. யங் இந்தியன் கோயமுத்துார் இணைந்து நடத்தும் மராத்தான், கோவில்பாளையத்தில், காலை, 5:45 மணிக்கு துவங்குகிறது.

முப்பெரும் விழா


கோவை அஞ்சல் தொழிற்சங்கம் சார்பில், முப்பெரும் விழா நடக்கிறது. தாய்ப்பால் தானம் அளித்து வரும் ஸ்ரீவித்யாவிற்கு பாராட்டு விழா நடக்கிறது. பேரூர், ராமசாமி நஞ்சம்மாள் ஹாலில் காலை, 9:00 மணிக்கு நடக்கும் விழாவில், பணி நிறைவு மற்றும் பதவி உயர்வு பெற்ற ஊழியர்களுக்கும் பாராட்டு விழா நடக்கிறது.

அமைதியின் அனுபவம்


தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம், மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற பெயரில், காலை, 11:00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்


தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை முகாம் நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை முகாம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us