தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்


ADDED : மார் 09, 2024 08:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2024 08:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குண்டம் திருவிழா


அன்னுார், சிறுமுகை ரோடு, கருப்பராயன் கலாமணி சுவாமி கோவிலில், மாசாணியம்மன், கரியகாளியம்மன் சன்னதியில், குண்டம் திருவிழா நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, சாமி அபிஷேக பூஜை, குண்டம் கண் திறத்தல், குண்டம் பூ போடுதல், அலங்கார பூஜை, கம்பம் சுற்றி ஆடுதல், அன்னதானம் ஆகியவை நடக்கிறது.

தேர்திருவிழா


கவுண்டம்பாளையம், ஹவுசிங் யூனிட், டாக்டர் அம்பேத்கர் நகர், மதுரை வீரன், பட்டத்தரசியம்மன், செல்வ விநாயகர், கன்னிமார் கோவிலில், 15ம் ஆண்டு தேர் திருவிழா நடக்கிறது. கடந்த மார்ச் 5ம் தேதி, கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழாவில், பல்வேறு பூஜைகள் நடந்து வருகின்றன. இன்று இரவு, 8:00 மணிக்கு, தண்டுமாரியம்மன் பூஜை நடக்கிறது.

சிவராத்திரி குண்டம் திருவிழா


சூலுார், கிழக்கு அங்காளம்மன் கோவிலில், மகா சிவாரத்திரி குண்டம் திருவிழா நடக்கிறது. இன்று, காலை, 5:00 முதல் 7:30 மணி வரை, அம்மனுக்கு நீராட்டு, அலங்கார பூஜை, அம்மன் புறப்பாடு, சிவன் பெருமாள் கோவில் வழிபாடு, அம்மன் கோவில் வந்து இறங்குதல் நடக்கிறது. காலை, 8:00 மணி முதல், பூக்குண்டம் இறங்குதல், அன்னதானம், அலகு நிறுத்துதல், அலங்கார, அபிஷேக பூஜை நடக்கிறது.

ஆன்மிக சொற்பொழிவு


'இறைவனும், உயிரும் வேறில்லை', 'சுய அறிவை தேடுங்கள், அதுவேமிக உயர்ந்த பேரின்பம்'போன்ற பல தத்துவங்களை கட உபநிஷத் விளக்குகிறது.டாடாபாத், 104, மூன்றாவது வீதியில், ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேஷனில், 'கட உபநிஷத் பாஷ்யம்' சொற்பொழிவு, மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. பொன்மணி அவினாசிலிங்கம் சிறப்புரையாற்றுகிறார்.

கலை விழா


கோவைப்புதுார், வி.எல்.பி., ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கலை விழா நடக்கிறது. நடிகை இவானா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மலுமிச்சம்பட்டி, எஸ்.என்.எம்.வி., கல்லுாரியில், கல்லுாரிகளுக்கு இடையேயான கலை விழா, காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. இதில், மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்வுகளை அரங்கேற்றுகின்றனர்.

பட்டமளிப்பு விழா


தமிழ்நாடு வேளாண் பல்கலையின், 43வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. பல்கலையின் பட்டமளிப்பு விழா அரங்கில், காலை, 10:30 மணிக்கு விழா துவங்குகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் விழாவில் கலந்து கொள்கின்றனர். இதேபோல், கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லுாரியில், பட்டமளிப்பு விழா, காலை, 11:00 மணிக்கு நடக்கிறது.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்


தொடர் சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபடலாம். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளியில் நடக்கிறது. இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை, முகாம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us