/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : மார் 09, 2024 09:16 PM

குண்டம் திருவிழா
அன்னுார், சிறுமுகை ரோடு, கருப்பராயன் கலாமணி சுவாமி கோவிலில், மாசாணியம்மன், கரியகாளியம்மன் சன்னதியில் குண்டம் திருவிழா நடக்கிறது. காலை, 9:00 முதல் 10:00 மணி வரை, கரகம் எடுத்தல், குண்டம் இறங்குதல் நடக்கிறது. மதியம், 1:00 மணிக்கு, அலங்கார பூஜை, திருவிளையாடல் அருள்வாக்கு, அன்னதானம் நடக்கிறது. மதியம், 3:00 மணிக்கு, மாசாணியம்மன் தேர் வடம் பிடித்தல் நடக்கிறது.
தேர் திருவிழா
கவுண்டம்பாளையம், ஹவுசிங் யூனிட், டாக்டர் அம்பேத்கர் நகர், மதுரை வீரன், பட்டத்தரசியம்மன், செல்வ விநாயகர், கன்னிமார் கோவிலில், 15ம் ஆண்டு தேர் திருவிழா நடக்கிறது. கடந்த மார்ச் 5ம் தேதி, கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழாவில், பல்வேறு பூஜைகள் நடந்து வருகின்றன. இன்று இரவு, 8:00 மணிக்கு, கன்னிமார் பூஜை நடக்கிறது.
அம்மனுக்கு விழா
சூலுார், கிழக்கு அங்காளம்மன் கோவிலில், குண்டம் திருவிழா முன்னிட்டு இன்று, காலை, 8:00 மணிக்கு, நகர்வலம் - அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது.
பட்டமளிப்பு விழா
கோவைப்புதுார், வி.எல்.பி., ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 13வது பட்டமளிப்பு விழா, காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். தொடர்ந்து, கல்லுாரியில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு, மதியம் 2:00 மணிக்கு நடக்கிறது.
பெண்கள் கிரிக்கெட் போட்டி
சி.பி.இ., பிட்ச் பர்னர்ஸ் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் சார்பில், மகளிர் தின சிறப்பு கிரிக்கெட் போட்டி நடக்கிறது. வட்டமலைபாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி சார்பில், மதியம், 1:30 மணிக்கு போட்டி நடக்கிறது. மாற்றுத்திறன் கிரிக்கெட் வீரர்களை ஆதரிக்கும் வகையில், இந்தப்போட்டி நடக்கிறது.
அமைதியின் அனுபவம்
தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது.
குருபூஜை விழா
வெள்ளலுார், சொர்ணாம்பிகை மற்றும் சித்தலிங்கேஸ்வரர் கோவிலில், பிரம்மானந்த சுவாமிகள் 21வது குருபூஜை விழா நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு கணபதி ஹோமம், மதியம், 12:00 மணிக்கு, சிவலிங்க திருமேனிக்கு ருத்ராபிஷேகம் நடக்கிறது. மதியம், 1:00 மணிக்கு, மகா தீபம், மகேஸ்வர பூஜை, அன்னதானம் நடக்கிறது.
வாக்கத்தான்
வுமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்துார் காட்டன் சிட்டியுடன் இணைந்து, வாக்கத்தான் நிகழ்ச்சியை நடத்துகிறது. கர்ப்பப்பைவாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சாய்பாபாகாலனி, பாரதி பார்க், காலை, 6:30 மணிக்கு, வாக்கத்தான் நடக்கிறது.
மகளிர் தின விழா
ஹார்ட்புல்னெஸ் இன்ஸ்டிடியூட், ஸ்ரீராம் சந்த்ர மிஷன் மற்றும் இந்தியன் வங்கி சார்பில், உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. நவஇந்தியா, எஸ்.என்.ஆர்., திருமண மண்டபத்தில், காலை, 10:00 மணிக்கு விழா நடக்கிறது. சாதனை பெண்கள், தொழில் முனைவோர் நிகழ்வில் கவுரவிக்கப்படவுள்ளனர். பெண்களுக்கு பல்வேறு திறன் போட்டிகளும் நடக்கின்றன.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி ரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.
பேஷன் பஜார் கண்காட்சி
டிரெண்டிங் அப்டேட்டுடன் வந்துவிட்டது, 'பேஷன் பஜார்' ஷாப்பிங் கண்காட்சி. இதில், ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் அலங்கார பொருட்கள் என லைப்ஸ்டைல் பேஷன் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. புரூக்பீல்ட்ஸ், பேன்குட் ஹாலில், காலை, 11:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, கண்காட்சி நடைபெறும். அனுமதி இலவசம்.

