/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : மார் 16, 2024 12:41 AM

பங்குனி உத்திரத் திருவிழா
பேரூர், பட்டீசுவரசுவாமி கோவிலில், பங்குனி உத்திரத் திருவிழா நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு, யாகசாலை பூஜை, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு, யாகசாலை பூஜை, இரவு, 8:00 மணிக்கு, சூர்யப்ரபை சந்திர பிரபையில் புறப்பாடு நடக்கிறது.
ராகவேந்திரர் அவதார நாள்
கோவைப்புதுார், ராகவேந்திர சுவாமி மடத்தில், ஸ்ரீ ராகவேந்திரரின் அவதார நாள் நடக்கிறது. விசேஷ அபிஷேகம், அலங்காரம், லட்சுமி ஹயக்ரீவ ஹோமம், ஹரி வாயுஸ்துதி ஹோமம், ராகவேந்திர அஷ்டாக்சர மந்திர ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம், காலை, 8:00 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது.
ஓயிலாட்ட அரங்கேற்ற விழா
சிம்மக்குரல் நாட்டுப்பறக் கலைக்குழுவின் ஓயிலாட்டம் அரங்கேற்ற விழா நடக்கிறது. கொண்டையம்பாளையம் ஊராட்சி, வையம்பாளையம், மகாலட்சுமி கோவில் அருகில், மாலை, 4:00 மணிக்கு, ஒயிலாட்டம் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு, அன்னதானம் நடக்கிறது.
ஐ.பி., யாத்ரா
மத்திய மைக்ரோ, சிறு மற்றும் குறு தொழில்முனைவோர் அமைச்சகத்தின், தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் சார்பில், 'ஐ.பி.,யாத்ரா' என்ற பெயரில் அறிவுசார் சொத்துரிமைகள் குறித்த கருத்தரங்கு நடக்கிறது. தேசியளவில் நடத்தப்படும் இந்த கருத்தரங்கு, ஐ.டி.சி.,வெல்கம் ஓட்டலில், காலை, 10:00 மணி முதல் நடக்கிறது.
ஓவியக் கண்காட்சி
கஸ்துாரி சீனிவாசன் அறநிலையம், தொடர் ஓவியக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. 'ரிதமிக் பேலட் தொடர்' என்ற ஓவியக் கண்காட்சி இன்றுநடக்கிறது. பல்வேறு ஓவியர்கள் தங்கள் ஓவியங்களை காட்சிப்படுத்துகின்றனர். காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை, கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம்.
நுாற்றாண்டு விழா
ரசனை மரபின் அடையாளங்களில் ஒருவரும், பல நுால்களின் ஆசிரியருமான, அறிஞர் சண்முகசுந்தரம் நுாற்றாண்டு விழா நடக்கிறது. அவிநாசி ரோடு, அண்ணா சிலை அருகே, ஆருத்ரா அரங்கத்தில், மாலை, 6:00 மணிக்கு, நுாற்றாண்டு விழா நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
தொடர் சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபடலாம். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளியில் நடக்கிறது. இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை, முகாம் நடக்கிறது.

