/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : மார் 16, 2024 11:59 PM

கும்பாபிஷேக விழா
தொண்டாமுத்துார், தேவராயபுரம், ஆதிவிநாயகர், பாலதண்டாயுதபாணி, மாகாளியம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழா நடக்கிறது. காலை, 4:30 மணிக்கு, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு, முளைப்பாரி தீர்த்தக்குடம் ஊர்வலம் வருதல், வாஸ்து சாந்தி வழிபாடுகள் நடக்கின்றன.
ஜெயந்தி விழா
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், ஊரக மேம்பாட்டு திட்டம் சார்பில், பகவான் ராமகிருஷ்ணரின், 189வது ஜெயந்தி விழா மற்றும் பள்ளிக்குழந்தைகளின் ஆண்டுவிழா நடக்கிறது. பெரியநாயக்கன்பாளையம் கூ.கவுண்டம்பாளையத்தில், பாரதிநகரில், மாலை, 5:30 மணிக்கு, விழா நடக்கிறது.
ஞான வேள்வி
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், ஞான வேள்வி எனும் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. இதில், 'குறை என் செய்தேன்' என்ற தலைப்பில், ஆன்மிக பேச்சாளர் கிருஷ்ணா உரையாற்றுகிறார். ராம்நகர், ராமர் கோவிலில், மாலை, 6:30 மணிக்கு சொற்பொழிவு நடக்கிறது. முன்னதாக மாலை, 6:00 மணிக்கு, ரமணர் பாடல்கள், ரமண சத்சங்கம் நடக்கிறது.
பங்குனி உத்திரத் திருவிழா
பேரூர், பட்டீசுவரசுவாமி கோவிலில், பங்குனி உத்திரத் திருவிழா நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு, யாகசாலை பூஜை, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு, யாகசாலை பூஜை, இரவு, 8:00 மணிக்கு, பூத வாகனம் சிம்ம வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது.
ஆண்டு விழா
அன்னுார், குப்பேபாளையம், காட்டம்பட்டி, மேட்டு மாகாளியம்மன் கோவிலில், முதலாம் ஆண்டு விழா நடக்கிறது. காலை, 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை, சிறப்பு வேள்வி, திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் ஆகியவை நடக்கிறது.
மகாருத்ர யக்ஞம்
ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானத்தில், மகாருத்ர யக்ஞம் நடக்கிறது. காலை, 6:00 முதல், 11:00 மணி வரை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், மஹன்யாச ஜபம், ருத்ர ஆவாஹனம், ருத்ராபிஷேகம், கோ பூஜை ஆகியவை நடக்கிறது. காலை, 11:00 முதல், 12:30 மணி வரை, ஸ்ரீ ருத்ர ஹோமம், வசோர்த்தாரை, தம்பதி பூஜை, கலசாபிஷேகம், மகா தீபாராதனை, பிரசாத விநியோகம் ஆகியவை நடக்கிறது.
ஓவியக் கண்காட்சி
கஸ்துாரி சீனிவாசன் அறநிலையம் சார்பில், 'ரிதமிக் பேலட் தொடர்' என்ற ஓவியக் கண்காட்சி நடக்கிறது. பல்வேறு ஓவியர்கள் தங்கள் ஓவியங்களை காட்சிப்படுத்தியுள்ளனர். காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை, ஓவியக் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம்.
ஷாப்பிங் கண்காட்சி
'ஹீனாஸ் கோ கிளாம்' ஷாப்பிங் கண்காட்சி, அவிநாசி ரோடு, நவஇந்தியாவில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் நடக்கிறது. கண்காட்சியில் ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் அலங்கார பொருட்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. காலை, 10:00 முதல், இரவு, 8:00 மணி வரை நடக்கும் இக்கண்காட்சியை காண, அனுமதி இலவசம்.
மகளிர் தின விழா
கோவை அகில பாரத பிராமணர் சங்கம் சார்பில், சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பபடுகிறது. வேலாண்டிபாளையம், பகவத் சிங் இரண்டாவது வீதியில், காலை, 11:00 மணிக்கு விழா நடக்கிறது. இதில், சாதனை பெண்கள் விருது வழங்கி கவுரவிக்கப்படவுள்ளனர்.
சுயமுன்னேற்ற பயிலரங்கு
திருப்புமுனை கோவை சார்பில், சுயமுன்னேற்ற பயிலரங்கம், பி.என்.புதுார், அறிவுத்திருக்கோவிலில் நடக்கிறது. காலை, 10:00 முதல் மதியம், 12:30 மணி வரை பயிலரங்கு நடக்கிறது. இதில், நேர மேலாண்மை குறித்து முனைவர் கல்யாணசுந்தரம் பேசுகிறார்.
பறவைகளுக்காக மராத்தான்
சிறகுகள் பறக்கட்டும் அமைப்பு சார்பில், பறவைகள் பாதுகாப்பை வலியுறுத்தி, மராத்தான் போட்டி நடக்கிறது. சரவணம்பட்டி, அத்திப்பாளையம் ரோடு, வில்வம் ஸ்போர்ட்ஸ் அரேனா அருகே, காலை, 6:00 மணிக்கு நடக்கிறது.
இலவச மருத்துவ ஆலோசனை
பி.எஸ்.ஜி., மருத்துவமனையின், 'பி' பிளாக்கில், இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடக்கிறது. இதில், வெரிக்கோஸ் வெயின், மார்பக கட்டிகள் மற்றும் மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கான இலவச ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. காலை, 8:00 முதல் மதியம், 1:00 மணி வரை முகாம் நடக்கிறது.
கண் பரிசோதனை முகாம்
கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பில், அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது. கோவை அரவிந்த் கண் மருத்துவனை இணைந்து நடத்தும் இந்த முகாம், கணுவாய், அரசு உயர்நிலைப்பள்ளியில், காலை, 8:30 முதல் மதியம், 1:30 மணி வரை நடக்கிறது.
அமைதியின் அனுபவம்
தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்., நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது.
* குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில் மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.

