/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று 'எப்போ வருவாரோ' ஆன்மிக சொற்பொழிவு
/
இன்று 'எப்போ வருவாரோ' ஆன்மிக சொற்பொழிவு
ADDED : ஜன 01, 2025 05:13 AM
கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், 'எப்போ வருவாரோ' 2024 ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில், 19வது ஆண்டாக இன்று துவங்குகிறது.
வரும் ஜன.,10ம் தேதி வரை, மாலை 6:00 மணிக்கு அருளிசையும் தொடர்ந்து, மாலை, 6:30 மணிக்கு சொற்பொழிவும் நடக்கிறது.
துவக்க நாளான இன்று, மாலை 6:30 மணிக்கு, ஆன்மிகத் தொண்டாற்றுபவர்களை கவுரவிக்கும் வகையில், அருள் வளர் செம்மல் விருது கார்த்திகேயன், முரளி கிருஷ்ணன், நாகராஜன், மூர்த்தி மற்றும் முருகேசன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
இதை தொடர்ந்து, பேச்சாளர் பாரதி பாஸ்கர் 'ராமானுஜர்' குறித்தும், நாளை ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே 'ஆண்டாள்' குறித்தும், சொற்பொழிவு நிகழ்த்துகின்றனர்.
தொடர்ந்து வரும் நாட்களில், சொற்பொழிவு நடக்கிறது.
இந்நிகழ்ச்சிகளை, கவிஞர் மரபின்மைந்தன் முத்தையா ஒருங்கிணைக்கிறார். மகேஸ்வரி சத்குரு தொகுத்துவழங்குகிறார்.

