/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்று போக்குவரத்து மாற்றம்: பிரதமர் மோடி வருகை எதிரொலி
/
மாநகரில் இன்று போக்குவரத்து மாற்றம்: பிரதமர் மோடி வருகை எதிரொலி
மாநகரில் இன்று போக்குவரத்து மாற்றம்: பிரதமர் மோடி வருகை எதிரொலி
மாநகரில் இன்று போக்குவரத்து மாற்றம்: பிரதமர் மோடி வருகை எதிரொலி
ADDED : மார் 18, 2024 12:46 AM

கோவை;பிரதமர் மோடி, இன்று மாலை கோவை வருகை தர உள்ளார். இதையடுத்து, கனரக வாகனங்கள் இன்று காலை, 6:00 முதல் நாளை காலை 11:00 மணி வரை, நகருக்குள் நுழைய அனுமதி இல்லை. முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அவிநாசி ரோடு
அவிநாசி ரோடு வழியாக மாநகருக்குள் வந்து சத்தி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, காந்திபுரம் செல்லும் வாகனங்கள் தொட்டிபாளையம் பிரிவு, காளப்பட்டி நால் ரோடு, சரவணம்பட்டி வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
அவிநாசி ரோடு வழியாக மாநகருக்குள் வந்து திருச்சி ரோடு, பொள்ளாச்சி ரோடு செல்பவர்கள் எல் அண்ட் டி பைபாஸ், சிந்தாமணி புதுார், சிங்காநல்லுார் வழியாக செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
இன்று மதியம், 2:00 முதல், 8:00 மணி வரை அவினாசி ரோடு எஸ்.என்.ஆர்., சந்திப்பு வழியாக, 100 அடி ரோடு மேம்பாலம், சிவானந்தா காலனி, மேட்டுப்பாளையம் ரோடு, டி.பி.ரோடு, புரூக் பீல்ட்ஸ் ரோடு, அவிநாசி ரோடு பழைய மேம்பாலம் ஆகிய பகுதிகளைத் தவிர்க்க வேண்டும். நாளை காலை, 7:00 முதல், 11:00 மணி வரை அவிநாசி ரோட்டை அனைத்து வாகன ஓட்டிகளும் தவிர்ப்பது நல்லது.
திருச்சி ரோடு
திருச்சி ரோட்டில் இருந்து சத்தியமங்கலம் மற்றும் மேட்டுப்பாளையம் ரோட்டுக்கு செல்பவர்கள் ராமநாதபுரம் சந்திப்பு, லட்சுமி மில், டபிள்யு.பி.டி., சந்திப்பு, ஆவாரம்பாளைம் ரோடு, கணபதி வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். ஹோப் காலேஜ், பீளமேடு மற்றும் எஸ்.என்.ஆர்., ஆகிய பகுதிகளைத் தவிர்க்கலாம். திருச்சி ரோட்டிலிருந்து பொள்ளாச்சி, பாலக்காடு செல்பவர்கள் வழக்கமான பாதையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
சத்தி சாலை
சத்தி சாலையிலிருந்து கணபதி, காந்திபுரம் வழியாக அவிநாசி ரோடு செல்பவர்கள் சரவணம்பட்டி சோதனை சாவடியிலிருந்து இடது புறம் திரும்பி, காளப்பட்டி வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். சத்தி சாலையிலிருந்து திருச்சி ரோடு, பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு செல்பவர்கள் கணபதி, ஆவாரம்பாளையம் மேம்பாலம், மகளிர் பாலிடெக்னிக், லட்சுமி மில் சந்திப்பு, கிட்னி சென்டர் மற்றும் ராமநாதபுரம் சந்திப்பு வழியாக, செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
மேட்டுப்பாளையம் ரோடு
மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து வரும் இலகுரக வாகனங்கள், துடியலுார் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, சரவணம்பட்டி வழியாகவோ அல்லது ஜி.என்.மில் மேம்பாலத்தின் கீழ் வலது புறம் திரும்பி, கே.என்.ஜி., புதுார் வழியாகவோ அல்லது கவுண்டம்பாளையம் மேம்பாலத்தின் கீழ் வலது புறம் திரும்பி, இடையர்பாளையம் வழியாகவோ நகருக்குள் செல்லலாம்.
மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து நகருக்குள் வரும் பஸ்கள் அனைத்தும், மேட்டுப்பாளையம் ரோடு சங்கனுார் பிரிவு சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, கண்ணப்ப நகர் வழியாக கணபதியை அடைந்து, காந்திபுரம் செல்ல வேண்டும்.
காந்திபுரத்திலிருந்து, மேட்டுப்பாளையம் செல்லும் பஸ்கள் அனைத்தும் சத்தி ரோடு, கணபதி, சூரியா மருத்துவமனை சந்திப்பில், இடதுபுறம் திரும்பி மணியகாரம்பாளையம் வழியாக சென்று, மேட்டுப்பாளையம் ரோட்டை அடைந்து செல்லலாம்.
மருதமலை, வடவள்ளி ரோடு
மருதமலை, வடவள்ளி பகுதியிலிருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும், லாலி ரோடு சந்திப்பில் வலதுபுறம் திரும்பி காந்திபார்க், தெலுங்குவீதி, ராஜவீதியை அடைந்து நகருக்குள் செல்லலாம். மருதமலை, வடவள்ளி பகுதியிலிருந்து மேட்டுப்பாளையம் ரோடு செல்லும் அனைத்து வாகனங்களும், லாலி ரோடு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, ஜி.சி.டி., கல்லுாரி சந்திப்பு, கோவில்மேடு, தடாகம் ரோடு, இடையர்பாளையம் சந்திப்பை அடைந்து, செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
உக்கடம் பகுதியிலிருந்து ஒப்பணக்கார வீதி, பூமார்க்கெட், சிந்தாமணி, டி.பி.ரோடு வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும், உக்கடம் சந்திப்பிலிருந்து இடது புறம் திரும்பி பேரூர் புறவழிச்சாலை, செல்வபுரம் உயர்நிலைப்பள்ளி, சிவாலயா சந்திப்பு, ராமமூர்த்தி ரோடு சொக்கம்புதுார் வழியாகவோ அல்லது செட்டிவீதி, சலீவன் வீதி, காந்திபார்க் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி லாலிரோடு சந்திப்பு, ஜி.சி.டி., சந்திப்பு, கோவில்மேடு, தடாகம் ரோடு இடையர்பாளையம் சந்திப்பு வழியாகவோ, செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
கோவை மாநகர போலீசார் இத்தகவலை தெரிவித்துள்ளனர்.

