/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பச்சிளம் குழந்தைகள் வார விழா கொண்டாட்டம்
/
பச்சிளம் குழந்தைகள் வார விழா கொண்டாட்டம்
ADDED : நவ 19, 2024 08:01 PM
பொள்ளாச்சி; தலைமை அரசு மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகள் ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்பைத் தடுக்க, நுண்ணுயிர் எதிர்ப்பி பயன்பாடு மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆண்டுதோறும், நவம்பர் மாதம் தேசிய பச்சிளம் குழந்தைகள் வார விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனையில், விழா நடந்தது. மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா தலைமை வகித்தார். குழந்தைகள் நலப் பிரிவு தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து, இந்த வார விழாவில், பிரசவித்த தாய்மார்கள் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட நேர இடைவெளியில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பு தடுப்பூசி செலுத்த வேண்டும்.
செவிலியர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு, குழந்தைகள் கருவிலேயே நல்ல ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், பச்சிளம் குழந்தைகள் ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்பைத் தடுக்க, நுண்ணுயிர் எதிர்ப்பு பயன்பாடு மேம்படுத்தப்படும், தேவையின்றி பச்சிளம் குழந்தைகளுக்கு ஆன்ட்டிபயாடிக் மருந்து வழங்குவது குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இருப்பிட மருத்துவ அலுவலர் மாரிமுத்து, குழந்தைகள் நல டாக்டர்கள் அமுதா, சிவசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.