/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூலுார் பஸ் ஸ்டாண்டில் கழிவறை தொட்டி சுத்தமாச்சு
/
சூலுார் பஸ் ஸ்டாண்டில் கழிவறை தொட்டி சுத்தமாச்சு
ADDED : ஆக 20, 2025 09:44 PM

சூலுார்; சூலுார் புது பஸ் ஸ்டாண்டில், நிரம்பி வழிந்த செப்டிக் டேங்கில், கழிவு நீர் அகற்றப்பட்டது.
சூலுார் புது பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிப்பிடத்தில் செப்டிக் டேங்க் நிரம்பி, கழிவு நீர் வெளியேறி வந்தது. இதனால் ஏற்பட்ட துர்நாற்றத்தால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். பேரூராட்சி நிர்வாகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்த செய்தி, நமது நாளிதழில் நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து, பேரூராட்சி நிர்வாகத்தினர், கழிவு நீர் அகற்றும் வாகனத்தின் மூலம், கழிவு நீரை அகற்றினர். மேலும், திறந்து கிடந்த செப்டிக் டேங்க் துவாரங்களுக்கு மூடிகள் போடப்பட்டு, கழிவறை மற்றும் சுற்றுப் பகுதிகள் சுத்தப்படுத்தப்பட்டன.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில்,' மூக்கை துளைக்கும் நாற்றத்தில் பஸ்சுக்கு காத்திருந்தோம். 'தினமலர்' செய்தியால், செப்டிக் டேங்க் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நடவடிக்கை எடுத்த பேரூராட்சி நிர்வாகத்துக்கு சபாஷ்,' என்றனர்.