சூலுார் தாலுகாவில் டோக்கன் வழங்கும் பணி துவக்கம்
சூலுார் தாலுகாவில் டோக்கன் வழங்கும் பணி துவக்கம்
ADDED : ஜன 06, 2026 05:18 AM
அ நிறம் | அளவு
சூலூர்: சூ லூர் தாலுகாவில், பொங்கல் பண்டிகைக்கு, 1,86,281 பேருக்கு, வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளன.
பொங்கல் பண்டிகைக்கு, சூலூர் தாலுகாவில், பொங்கல் தொகுப்புடன், 93 ஆயிரத்து, 249 பேருக்கு, சேலைகளும், 93 ஆயிரத்து, 32 பேருக்கு வேஷ்டிகளும் வழங்கப்பட உள்ளன.
ரேஷன் கடை ஊழியர்கள், அரிசி அட்டைதாரர்களுக்கு, டோக்கன் வழங்கும் பணியை நேற்று துவக்கினர். வீடு தேடி சென்று டோக்கன்களை வழங்கி வருகின்றனர்.
