/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொங்கல் தொகுப்பு வழங்க 3.40 லட்சம் பேருக்கு டோக்கன்
/
பொங்கல் தொகுப்பு வழங்க 3.40 லட்சம் பேருக்கு டோக்கன்
பொங்கல் தொகுப்பு வழங்க 3.40 லட்சம் பேருக்கு டோக்கன்
பொங்கல் தொகுப்பு வழங்க 3.40 லட்சம் பேருக்கு டோக்கன்
ADDED : ஜன 03, 2025 11:58 PM

கோவை; ''பொங்கல் தொகுப்பு வழங்க, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 3.40 லட்சம் டோக்கன் நேற்று கொடுக்கப்பட்டுள்ளது,'' என, கோவை மாவட்ட கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்புடன் ரொக்கப்பணம், 1000 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அது குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. இதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
கோவை மாவட்டத்தில், 1540 ரேஷன்கடைகள் உள்ளன. இந்த கடைகள் வாயிலாக 11.11 லட்சம் கார்டுதாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இவற்றுடன், மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள், 1992 பேர் ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று பொங்கல் தொகுப்பு பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ரேஷன்கடை வாயிலாக, டோக்கன் வழங்கும் பணி துவங்கியது.
இது குறித்து, கோவை மாவட்ட கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் ராஜேந்திரன் கூறுகையில், ''பொங்கல் தொகுப்பு, அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது. ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று முதல், டோக்கன் கொடுத்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இன்று (நேற்று) மட்டும் 3.40 லட்சம் டோக்கன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு நாட்களுக்குள், டோக்கன் முழுமையாக கொடுத்து முடிக்கப்படும்,'' என்றார்.