/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தக்காளி சாகுபடி பாதிப்பு; லாபம் குறைவால் அதிருப்தி
/
தக்காளி சாகுபடி பாதிப்பு; லாபம் குறைவால் அதிருப்தி
தக்காளி சாகுபடி பாதிப்பு; லாபம் குறைவால் அதிருப்தி
தக்காளி சாகுபடி பாதிப்பு; லாபம் குறைவால் அதிருப்தி
ADDED : ஆக 14, 2025 08:30 PM

நெகமம்; நெகமம், மூட்டாம்பாளையத்தில் தக்காளி சாகுபடி பாதிப்படைந்துள்ளது.
நெகமம், மூட்டாம்பாளையத்தில் மழை காரணமாக, தக்காளி சாகுபடி வயலில் களைச்செடிகள் அதிகளவில் முளைத்துள்ளன. இதனால், தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயி ரவி கூறியதாவது:
ஒரு எக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்கிறோம். இதில், இரண்டு மாதத்துக்கு முன், தக்காளி நடவு செய்யப்பட்டது. கனமழையால் தக்காளி செடியில் பூக்கள் உதிர்ந்துள்ளது. சில செடிகள் சாய்ந்தும், அதிகளவு களை செடிகள் முளைத்தும் இருப்பதால் தக்காளி பறிக்க சிரமம் ஏற்பட்டுள்ளது.
தற்போது, ஒரு நாள் விட்டு ஒரு நாள் தக்காளி பறிக்கிறோம். இதற்கு இயற்கை மற்றும் ரசாயன உரம் என இரண்டும் உபயோகிக்கிறோம். மேலும், சொட்டு நீர் பாசன முறையை அமைத்துள்ளோம். தற்போது வரை, 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று தினங்களுக்கு முன் பறிக்கப்பட்ட தக்காளியை பொள்ளாச்சி மார்க்கெட்டில், 16 கிலோ பெட்டி, 340 ரூபாய்க்கு விற்பனை செய்தோம். மழையால் சாகுபடி பாதித்ததால் பெரிதாக லாபம் இல்லை.
இவ்வாறு, கூறினார்.