/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தக்காளி விலை உயர இனி வாய்ப்பில்லை
/
தக்காளி விலை உயர இனி வாய்ப்பில்லை
ADDED : ஆக 12, 2025 09:28 PM
தொண்டாமுத்தூர்; தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், தக்காளி வரத்து சீராக உள்ளதால், தக்காளி விலை உயர வாய்ப்பில்லை என, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூலுவபட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று, 14 கிலோ எடையுள்ள ஒரு டிப்பர் தக்காளி, 400 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெண்டை, 50 ரூபாய்க்கும், கத்தரி, 50 ரூபாய்க்கும், அவரை 30 ரூபாய்க்கும், முட்டைகோஸ், 15 ரூபாய்க்கும், பச்சை மிளகாய், 50 ரூபாய்க்கும், கொத்துமல்லி ஒரு கட்டு, 10 ரூபாய்க்கும் விற்பனையானது. பூலுவபட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில், தக்காளி வரத்து சீராக உள்ளதால், கடந்த ஒரு வாரமாக, ஒரு டிப்பர் தக்காளி விலை, தொடர்ந்து 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வரத்து சீராக உள்ளதால், இன்னும் ஒரு வாரத்திற்கு விலை உயர வாய்ப்பில்லை என, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

