/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தக்காளி விலை சரிவு; விவசாயிகள் அதிருப்தி; விற்பனையாகாமல் ரோட்டோரத்தில் குவிப்பு
/
தக்காளி விலை சரிவு; விவசாயிகள் அதிருப்தி; விற்பனையாகாமல் ரோட்டோரத்தில் குவிப்பு
தக்காளி விலை சரிவு; விவசாயிகள் அதிருப்தி; விற்பனையாகாமல் ரோட்டோரத்தில் குவிப்பு
தக்காளி விலை சரிவு; விவசாயிகள் அதிருப்தி; விற்பனையாகாமல் ரோட்டோரத்தில் குவிப்பு
ADDED : அக் 14, 2025 10:16 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு மார்க்கெட்டில், தக்காளி விலை சரிந்து வரும் நிலையில், விற்பனையாகாத தக்காளி கோதவாடி ரோட்டோரம் கொட்டப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதியில் தென்னைக்கு அடுத்தபடியாக, ஆண்டு தோறும், 450 ஹெக்டேர் பரப்பில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இதில், சாகோ, சிவம் உள்ளிட்ட ரகங்கள் நடவு செய்யப்படுகிறது.
கடந்த, 2 மாதங்களாக தக்காளி விலை (15 கிலோ பெட்டி) 300 வரை இருந்து வந்தது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. தற்போது, மார்க்கெட்டில், தக்காளி (15 கிலோ) அதிகபட்ச விலையாக 200; குறைந்த பட்ச விலையாக, 150 ரூபாய் இருந்தது. இதனால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.
இரண்டு மாதங்களாக, கட்டுபடியான விலை கிடைக்காததால், பெரும்பாலான விவசாயிகள் விளைநிலங்களில் தக்காளியை பறிக்காமலும், சிலர் கால்நடைகளுக்கு தீவனமாகவும் விட்டனர்.
மார்க்கெட்டில் விற்பனைக்காக எடுத்து சென்ற தக்காளி, போதிய விலை இல்லாததால், கீழே கொட்டி செல்கின்றனர்.
விவசாயிகள் கூறியது:
கிணத்துக்கடவு மார்க்கெட்டில், விற்பனைக்கு தக்காளி கொண்டு வருவது வழக்கம். தற்போது தக்காளி விலை கடும் சரிவில் உள்ளது. இத்துடன், தக்காளியை ஏற்றி இறக்கும் போதும், பெட்டியில் அடுக்கும் போதும், அதிகபட்சமாக, 2 கிலோ வரை சேதமடைகிறது.
ஒரு சில விவசாயிகள் சிறிய தக்காளியை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதற்கும் விலை கிடைக்காமல் போகிறது. செடியினை முறையாக பராமரித்து பெரிய சைஸ் தக்காளியை பறித்து எடுத்து வந்தாலும் விலை கிடைப்பதில்லை.
செடியில் களை எடுத்தல், உரம், பூச்சி மருந்து, பறிப்பு, போக்குவரத்து என செலவினங்களுக்கு ஏற்ப, தக்காளிக்கு கட்டுபடியான விலை கிடைப்பதில்லை. இதனால், தக்காளியை செடிகளில் இருந்து பறிப்பதில்லை. விற்பனையாகாத தக்காளியை இருப்பு வைக்க வழியின்றி ரோட்டோரத்தில் கொட்டுகிறோம்.
இவ்வாறு, கூறினர்.