/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வடகிழக்கு பருவமழையால் தக்காளி விலை அதிகரிப்பு
/
வடகிழக்கு பருவமழையால் தக்காளி விலை அதிகரிப்பு
ADDED : அக் 26, 2025 10:22 PM

கோவை: வடகிழக்கு பருவமழை பெய்யத்துவங்கி இருப்பதால், தக்காளி விளைச்சல் குறைந்து, விலை அதிகரித்துள்ளது.
மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள, தக்காளி மொத்த மார்க்கெட்டுக்கு ஒரு நாளைக்கு, 100 டன் மேல் தக்காளி வருகிறது.
கர்நாடகா மற்றும் மைசூரில் இருந்து, 75 சதவீதம் தக்காளியும், நாச்சிப்பாளையம், கிணத்துக்கடவு, பூலுவபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 30 சதவீதம் தக்காளியும், விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வடகிழக்கு பருவமழை பெய்ய துவங்கி இருப்பதால், தக்காளி விளைச்சல் குறைந்து விலை அதிகரித்துள்ளது.
கோவை தக்காளி மொத்த மார்க்கெட்டில், தீபாவளிக்கு முன்பு வரை ஒரு கிலோ 10 முதல் 18 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இப்போது முதல் தரமான நாட்டு தக்காளி 27 முதல் 30 ரூபாய்க்கும், ஆப்பிள் தக்காளி கிலோ 20 முதல் 24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனையில், 35 மற்றும் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இப்போது மழைக்காலம் என்பதால், விளைச்சல் குறைந்துள்ளது. விளைச்சல் அதிகம் இருந்தாலும், இந்த சீசனில் விரயமாகும் தக்காளி அதிகமாக இருக்கும். அதனால் கிலோவுக்கு 10 ரூபாய் வரை விலை தற்போது அதிகரித்துள்ளது. மழை தீவிரமடைந்தால், விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. - துரைவேலு- கோவை காய்கறி மொத்த விற்பனையாளர் சங்கம்

