/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளைச்சல் குறைவால் தக்காளி விலை உயர்வு
/
விளைச்சல் குறைவால் தக்காளி விலை உயர்வு
ADDED : ஆக 25, 2025 12:15 AM

கோவை; மழையின் காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்து, விலை உயர்ந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மேட்டுப்பாளையம் ரோடு எருக்கம்பெனி பகுதி தங்காளி மார்க்கெட்டுக்கு, கிணத்துக்கடவு, நாச்சிப்பாளையம், காளாம்பாளையம் மற்றும் ஆலாந்துறை பகுதியில் இருந்தும், கர்நாடகா மற்றும் மங்களூரில் இருந்தும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. சில மாதங்களாக விலை குறைந்திருந்த தக்காளி, இந்த வாரத்தில் விலை உயர்ந்து சில்லரை விற்பனையில் கிலோ, 55 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வு குறித்து, வியாபாரிகள் கூறியதாவது:
விவசாயிகள் இப்போது ஆடிப்பட்டத்தில் தக்காளி நடவு செய்துள்ளனர். அதனால் கர்நாடகா, மங்களூர் பகுதியில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கும் மழை இருப்பதால் விளைச்சல் குறைந்துள்ளது. இன்னும் மூன்று மாதங்களுக்கு தக்காளி விலை குறையாது சில்லரை விலையில் கிலோ 55 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு, தெரிவித்தனர்.