ADDED : செப் 13, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே பட்டக்காரன்பாளையத்தில், பழமை வாய்ந்த ஸ்ரீ திம்மராயப் பெருமாள் கோவிலில் வரும் 17ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அரண்மனை வடிவில் யாகசாலையும் அதில், 9 ஹோம குண்டங்கள் மற்றும் பிராதனத்துடன் சேர்த்து 7 வேதிகைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
வேதிகைகளில் ராஜகோபுரம், ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராயப் பெருமாள், கருடாழ்வார், ஆஞ்சநேயர், சங்கு சக்கரம் உட்பட வண்ண வேலைபாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை, இரும்பொறை கைலாசநாதர் கோவிலில் இருந்து விமான கலசம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திம்மராயப் பெருமாள் கோவிலை அடைகிறது.
