ADDED : ஜன 20, 2025 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கோவை, சிறுவாணி சாலை ஆலாந்துறையை அடுத்த நாதேகவுண்டன் புதூரில், ஸ்ரீமத் தர்மராஜா அருள் பீடத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள, கொங்கு காசி அஷ்ட பைரவர் கோவிலில், நாளை ஸ்ரீ கால பைரவர் தேய்பிறை அஷ்டமி பூஜை நடக்கிறது.
காலை 7:00 மணிக்கு, உலக நலன் வேண்டி மஹாயாகமும், இரவு 7:-30 மணிக்கு கண் திருஷ்டி நிகழ்வும் நடக்கிறது. பைரவர் அருள் கிடைக்க, 1,000- பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
அனைவரும் பங்கேற்க வேண்டுமென, கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.