/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளை தான் கடைசி நாள்... வரி செலுத்தாவிட்டால் ஜப்தி
/
நாளை தான் கடைசி நாள்... வரி செலுத்தாவிட்டால் ஜப்தி
நாளை தான் கடைசி நாள்... வரி செலுத்தாவிட்டால் ஜப்தி
நாளை தான் கடைசி நாள்... வரி செலுத்தாவிட்டால் ஜப்தி
ADDED : மார் 21, 2025 10:29 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகராட்சியில், நாளைக்குள் வரி செலுத்தாவிட்டால், வணிக நிறுவனங்கள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும், என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி நகராட்சியில், வரி செலுத்தாதவர்களுக்கு, ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால், சிலர் உரிய கால கெடுவுக்குள் வரி செலுத்தாமல் அலட்சியமாகவும், வரி ஏய்ப்பு செய்கின்றனர்.
வரி செலுத்தாமல் உள்ளவர்களின் பெயர் பட்டியல் பொதுமக்களிடம் காட்சிப்படுத்தப்படும் என நகராட்சி தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இறுதி வாய்ப்பாக நாளைக்குள் வரி செலுத்தாவிட்டால் வணிக நிறுவனங்கள் ஜப்தி செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நகராட்சி கமிஷனர் கணேசன் கூறியதாவது:
பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம் 27,260 சொத்து வரி விதிப்புகள் உள்ளது. 10வது வார்டில் (நகராட்சி தலைவர் வார்டு) 885 பேர் வரி செலுத்த வேண்டியவர்கள் உள்ளனர். அந்த வார்டில், மொத்தம், 83 லட்சத்து, 38 ஆயிரத்து, 203 ரூபாய் வரி வசூலித்து, 100 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
2வது வார்டு (வடுகபாளையம் பகுதி) 98.45 சதவீதம், முதல் வார்டு, 97.19; ஒன்பதாவது வார்டு, 97.07; நான்காவது வார்டு, 97.18; 11வது வார்டு, 97.41 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த வார்டுகளில், 100 சதவீதம் என்ற இலக்கு ஒரு சில நாட்களுக்குள் நிறைவு செய்யப்படும். குறைந்தபட்சமாக வார்டு, 24வது வார்டில், 75.78சதவீதம், 25ல், 78 சதவீதமும் வசூலாகியுள்ளது.
நகராட்சியில் மொத்த சொத்து வரி, 94.55 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மீதம், ஒரு கோடியே, 45 லட்சம் ரூபாய் வசூலிக்க வேண்டியதுள்ளது. இதற்கான பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சொத்து வரி செலுத்தாதவர்கள், 23ம் தேதிக்குள் வரி வசூல் மையத்திலோ அல்லது 'ஆன்லைன்' வாயிலாகவோ செலுத்த இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதிலும், வரி செலுத்தாவிட்டால், ஜப்தி நோட்டீஸ் அனுப்பி சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.