ADDED : ஜன 20, 2026 05:07 AM
அ நிறம் | அளவு
கோவை: வேளாண் பல்கலை பூச்சியியல் துறையில், ஒட்டுண்ணி மற்றும் இரை விழுங்கிகள் வளர்ப்பு மற்றும் பயன்படுத்தும் முறை பற்றி, ஒரு நாள் பயிற்சி நாளை நடக்கிறது.
ஒட்டுண்ணிகளின் வகைகள், ஊண் விழுங்கிகள், நெல் அந்துப்பூச்சி வளர்ப்பு முறை, டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி வளர்ப்பு, புழு ஒட்டுண்ணி வளர்ப்பு, கண்ணாடி இறக்கைப் பூச்சி வளர்த்தல், பொறிவண்டு வளர்ப்பு, பயிர் பாதுகாப்பில் ஒட்டுண்ணிகள், இரைவிழுங்கிகளின் பயன்பாடு கற்றுத்தரப்படும்.
காலை 9:00 மணிக்கு, பூச்சியியல் துறைக்கு வர வேண்டும். கட்டணம் ரூ.900. தொடர்புக்கு 0422-6611414.
