/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆரோக்கியமான கற்றல் சூழலுக்கு டாப்ஸ் பள்ளி
/
ஆரோக்கியமான கற்றல் சூழலுக்கு டாப்ஸ் பள்ளி
ADDED : பிப் 28, 2026 05:43 AM
சரவணம்பட்டி, கரட்டுமேடு, ரத்தனகிரி மலைச்சாரலில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் டாப்ஸ் பப்ளிக் பள்ளி அமைந்துள்ளது. இக்கல்வி நிறுவனம், 2010ம் ஆண்டு தொடங்கப்பட்டு 16 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான கல்விச் சேவையை வழங்கி வருகின்றது.மாணவர்களின் அறிவு, ஒழுக்கம் மற்றும் விளையாட்டு ஆகியவற்றை வளர்க்கும் ஒரு ஆரோக்கியமான கற்றல் சூழலை இப்பள்ளி உருவாக்கியுள்ளது.
இந்தக் கல்வி நிறுவனத்தின் தலைவர் கார்த்திகேயன், செயலாளர்அனிதா, கல்வி மேம்பாட்டிற்கானவலுவான அடித்தளத்தை அமைத்துள்ளனர். நவீன காலத்திற்கு ஏற்ப கல்வி முறையில் புதுமைகள் புகுத்தப்படுகிறது. மாணவர்கள் 10 மற்றும் பிளஸ் 2பொதுத் தேர்வில் தொடர்ந்து நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.சிலம்பம், நடனம், கராத்தே, யோகா போன்ற கலைகள் கற்றுத் தரப்படுகிறது.
அன்றாடம் மாலை நேரங்களில் மாணவர்களுக்கு கால்பந்து, கையுந்துபந்து, எறிபந்து, கோ- கோ, கேரம், செஸ் மற்றும் தடகளப் போட்டிகளுக்குப் பயிற்சி கொடுத்து வருகின்றனர். இந்த கல்வியாண்டு முதல் பாரதிதாசன் பல்கலையுடன் இணைந்து ரோபோடிக்ஸ் வகுப்பு தொடங்கப்படுகிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு சேர்வதற்கான நீட் மற்றும் ஜே.இ.இ., தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் எழுதுவதற்கு அன்அகாடமி நிறுவனத்துடன் இணைந்து பயிற்சி வழங்கப் படுகிறது.

