/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
ADDED : ஜூலை 30, 2025 08:26 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், சாலை பணியாளர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கம் சார்பில், தீப்பந்தம் ஏந்தி போராட்டம், நெடுஞ்சாலைதுறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் நடந்தது. கோட்ட தலைவர் வெற்றிவேல் தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் ஜெகநாதன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இதில், சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற வழக்குப்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யாமல் சென்னை உயர்நீதிமன்ற ஆணையை அமல்படுத்த வேண்டும்.
மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்திட வேண்டும். தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, தீப்பந்தம் ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.
அரசு ஊழியர் சங்க வட்ட கிளை தலைவர் பத்மநாபன், பொது நுாலகத்துறை சங்க மாநில பொருளாளர் மதியரசன், மாநில செயலாளர் அம்சராஜ் பேசினர் .
கோட்ட பொருளாளர் சின்னமாரிமுத்து நன்றி கூறினார்.