/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காசி, அயோத்திக்கு சுற்றுலா ஏற்பாடு
/
காசி, அயோத்திக்கு சுற்றுலா ஏற்பாடு
ADDED : ஏப் 19, 2025 11:49 PM
கோவை: சென்னையிலிருந்து காசி, அயோத்தி, கயா, திருவேணி சங்கமம் சுற்றுலாவுக்கு சீனிவாசா டூர் ஆபரேட்டர் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
நிறுவன உரிமையாளர் சேஷாத்ரி கூறியதாவது:
குறைந்த கட்டணத்தில், வட மாநில ஆன்மிகம் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு 11 நாட்கள் ரயில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து ஜூன் 16, ஜூலை 20, ஆக., 17, செப்., 21, நவ., 9 ஆகிய தேதிகளில், ரயிலில் புறப்பட்டு சென்று ஆக்ரா, மதுரா, பிருந்தாவனம், அயோத்தி ராமர் கோவில், அலகாபாத் திருவேணி சங்கமம், வாரணாசி காசி விசுவநாதர், புத்த கயா புத்தர் கோவில், டில்லி உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு அழைத்து செல்லப்படுவர்.
ரயில், பஸ் வசதி, தங்கும் வசதி, உணவு அனைத்தும் சேர்த்து, நபர் ஒருவருக்கு ரூ.18,000 மட்டுமே. விபரங்களுக்கு, 93848 54561, 93848 54569.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

