/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வால்பாறை - ஆழியார் இடையே ரோப்கார் சுற்றுலாத்துறை சார்பில் துவங்க எதிர்பார்ப்பு
/
வால்பாறை - ஆழியார் இடையே ரோப்கார் சுற்றுலாத்துறை சார்பில் துவங்க எதிர்பார்ப்பு
வால்பாறை - ஆழியார் இடையே ரோப்கார் சுற்றுலாத்துறை சார்பில் துவங்க எதிர்பார்ப்பு
வால்பாறை - ஆழியார் இடையே ரோப்கார் சுற்றுலாத்துறை சார்பில் துவங்க எதிர்பார்ப்பு
ADDED : ஜன 16, 2025 11:32 PM

வால்பாறை; கோவை மாவட்டத்தின் ஒரே சுற்றுலாஸ்தலமான வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணியர் வந்து செல்கின்றனர். சுற்றுலாபயணிகளை மகிழ்விக்க அட்டகட்டியில், 'வியூ பாய்ண்ட்' அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, நல்லமுடி பூஞ்சாலை, நெம்பர் பாறை, சிறுகுன்றா கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுலாபயணிகள் சென்று வர வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இது தவிர, பி.ஏ.பி.,பாசனத்திட்டதின் கீழ் உள்ள சோலையாறு, மேல்நீராறு, கீழ்நீராறு உள்ளிட்ட அணைகளையும் சுற்றுலாபயணியர் மனதை வெகுவாக கவர்ந்துள்ளன.
சுற்றுலாபயணியரை மகிழ்விக்கும் வகையில் வால்பாறை நகர் பகுதியில் நகராட்சி சார்பில் படகுஇல்லம், தாவரவியல்பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கொடைக்கானலையடுத்து வால்பாறைக்கு தான் அதிக அளவில் சுற்றுலாபயணியர் வந்து செல்கின்றனர்.
வால்பாறை மக்கள் கூறியதாவது: கடந்த, 50 ஆண்டுகளுக்கு வால்பாறை (அய்யர்பாடி ரோப்வே) - ஆழியாறு இடையே ரோப்கார் செயல்படுத்தப்பட்டது. நாளடைவில் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் ரோப்கார் திட்டம் படிப்படியாக கைவிடப்பட்டது.
தற்போது தமிழகத்தின் சிறந்த சுற்றுலாஸ்தலமாக வால்பாறை மாறியுள்ளதையடுத்து, வால்பாறை- ஆழியாறு இடையே மீண்டும் ரோப்கார் துவங்க வேண்டும்.
இதற்கான சுற்றுலாத்துறை சார்பில் குறைவான கட்டணம் நிர்ணயம் செய்து, சுற்றுலாபயணிகளிடம் வசூலிக்க வேண்டும். இதனால் வால்பாறைக்கு சுற்றுலாபயணியர் வருகையும் அதிகரிக்கும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.